பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ-து. சுந்தரவடிவேலு o 523 ஜெகதீசன் உடற்பாதையைத் தாங்க முடியாது தவிப்பதை விளக்கினேன். பட்டென்று உயிர் போய்விட்டால், அது வேறு விஷயம். அப்போது அணு அணுவாகச் சிதையும் வேதனை நமக்குத் தெரியாது. இப்போது ஜெகதீசனைப் பார்க்கும்போது உணரமுடிகிறது. 'உண்ணா நோன்பை விட்டுவிட்டால் நல்லது. என்று நான் ஜெகதீசனிடம் கூறிவிட்டேன். அதற்காக என்னை மன்னிக்கக் கோருகிறேன். 'நான் அறிந்த மட்டில், உண்ணா நோன்பை நிறுத்திக் கொள்ள, அவர் ஆழ்மனம் விரும்புகிறது. வாழ்நாள் முழுவதும் பழிச்சொல்லைக் கேட்க நேரிடுமே என்பதும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அது பாதிக்குமே என்று எண்ணியும் தயங்குகிறார்' என்றேன். "ஆமாங்க! ஒர் உயிர் அநியாயமாகப் போகவேண்டாங்க. பொதுக்காரியங்களுக்கு இத்தகைய வழியைப் பின்பற்றக்கூடாது. இது என் கொள்கை' என்று கூறிய பெரியார். 'அது அய்யாவிற்கே தெரியும். இந்த நிலையில் என்ன செய்தால் ஜெகதீசன் உயிரைக் காப்பாற்றலாம்' என்று என்னைக் கேட்டார். 'அய்யா பேரளம் மகாதேவ முதலியார், ஜெகதீசனுக்கு அத்தான் முறை; இருவருக்கிடையிலும் நல்லுறவு உண்டு. அவரை வரவழைத்து, அவரைக் கொண்டு ஜெகதீசனுக்கு வேண்டுகோள் விட உத்தேசம். அது பலிக்கலாம். அய்யா ஆதரவு இருந்தால்' என்றேன். அய்யா பூரித்துப் போனார், 'திரு. மகாதேவன் நம்ம இயக்கத்தவர்; பக்குவமாகப் போகக் கூடியவர். அவர் முயற்சி பலித்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் இன்றே நோன்பைத் தளர்த்தும்படி தலையங்கம் எழுதுகிறேன். தொடர்ந்து ஜெகதீசனைப் பார்த்துக் கொண்டிருங்க. அவருடைய மரியாதைக்கு இழுக்கு நேரிடாத வகையில் நோன்பை முடித்து வையுங்கள். அதனால் இந்தி எதிர்ப்பு இயக்கம் பாதிக்காதபடி நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, எனக்கு விடை கொடுத்தார். அப்படியே பெரியார் தலையங்கம் தீட்டினார்; பேசினார்; உண்ணா நோன்பிற்குக் கொடுத்த மதிப்பை வேறுபக்கம் பக்குவமாகத் திருப்பினார். திட்டமிட்டபடி, திரு. மகாதேவன் வந்து சேர்ந்தார். என்னை வந்து கண்டார். அவரிடம் பின்னணியை விரிவாகக் கூறினேன். அணுகு முறையைக் கோடிட்டுக் காட்டினேன். திரு. மீ. பக்தவத்சலத்தைக் கலந்துகொண்டு, நடவடிக்கையில் இறங்கச் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/566&oldid=787517" இலிருந்து மீள்விக்கப்பட்டது