பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 527 இராயபுரம் ராபின்சன் பூங்கா, சிவஞானம் பூங்கா. மூர் அங்காடிக்குப் பின்புறம் - இவ்விடங்களில் அடிக்கடி கூட்டம் நடக்கும். காசு செலவு செய்து அங்கெல்லாம் செல்வேன். கடைசிவரை கேட்பேன். திருச்சியிலிருந்து சென்னைவரை நடந்து வந்த கட்டாய இந்தி எதிர்ப்புப் படைக்கு, எழுபதாயிரம் மக்கள் திருவல்லிக்கேணி கடற்கரையில் வரவேற்கக் கூடியபோது, நான் கூட்டத்தில் இருந்தேன். அக்கூட்டத்தில்தான் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார். அக் கூட்டங்களின்போது என்னைத் தேடிச் சிலர் வந்து சேருவார்கள். புரசைவாக்கம் ந.ரா. சடகோபன், அவர் அக்காள் மகன் ராமானுஜம், திருமதி. சத்தியவாணிமுத்துவின் கணவர் முத்து, திருவாரூர் டி.என். இராமன், பெத்துநாயக்கன் பேட்டை சிவஞானம், கணேசன் ஆகியோர் கூட்டத்தோழர்கள். பலவேளை எழும்பூர்வரை நடந்து வந்து மின் இரயில் ஏற நேரிடும். தாலமுத்து, நடராசன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டவர்களில் தாலமுத்து, நடராசன் ஆகிய இருவர் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து என் அஞ்சலியைச் செலுத்தினேன். தாலமுத்துவின் மறைவு பற்றிச் சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி. பன்னிர் செல்வம் கேள்வி எழுப்பினார். பிரதமர் ராஜாஜியே சொல்லிழுக்குப் பட்டுவிட்டார். "தற்குறி தாலமுத்து தேவையில் லாமல் சிறைப்பட்டு, இறந்தார்' என்று சொன்னார். அது எண்ணற்ற தமிழர்களின் உள்ளங்களைப் புண்படுத்தியது. தாலமுத்துப் போன்ற கோடிக்கணங்கானவர்களின் தற்குறித் தன்மையைப் போக்க, சுட்டுவிரலையும் அசைக்காத பிரதமர் ராஜாஜி இப்படி இழிவுபடுத்தியது' பண்பாடல்ல; அப்புண் என் தலை முறையினர் பலருக்கு ஆறாமலே வதைக்கிறது. இன்றும் தற்குறித் தன்மையை ஒழிக்க, மெய்யான உயிரோட்டமுள்ள முயற்சிகள் இல்லையே! பெரியார் ராமசாமி மகளிர் அணி, இந்தி எதிர்ப்புப் போரில் குதிப்பதற்கு முன்பு, சென்னை ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் 13-11-38 அன்று ஒரு மாநாட்டைக் கூட்டியது. டாக்டர் தருமாம்பாள் சூத்திரதாரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/570&oldid=787527" இலிருந்து மீள்விக்கப்பட்டது