பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 நினைவு அலைகள் == 'முதுமைப் பருவத்திலும் அவர் தலைசாய்த்துப் படுக்கையில் கிடந்து காலங் கழித்தாரில்லை; அவர் தமிழ்நாட்டின் நாலா பக்கமும் சுழன்று சுழன்று இரவு பகல் ஓயாது கர்ச்சனை செய்து வந்தார். 'ஒய்வு என்பதை அறியாது வீர கர்ச்சனை புரிந்து வந்த கிழச் சிங்கம் இப்பொழுது ஒய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலை நிமிர்ந்து கிடக்கிறது.' அக்காலத் தமிழ்ப் பெரியோர்களிடம் தனிச்சிறப்பு ஒன்று ஒளி விட்டது. அது என்ன? கருத்துகளை கொள்கைகளை விட்டுக், கொடுக்காத உறுதி ஒருவருக்கொருவரைப் பகையாக நினைக்கும் கீழ்மைக்குப் போகாமை பெரியாரும் ராஜாஜியும் மோதாத மோதலா? திரு.வி.க.வும் பெரியாரும் கருத்து மோதல்களில் திளைத்தது, காமராஜரும் பெரியாரும் கருத்து மண்டலத்தில் சாடிக் கொண்டது குறைவல்ல. இருப்பினும் தனிப்பட்ட பகைவர்களாக அவர்கள் மாறி விட வில்லை. ஒரு வரை ஒருவர் மதிக்கும் பண்பாளர்களாக விளங்கினார்கள். தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி சிறைப்பட்ட பிறகும் கட்டாய இந்தி எதிர்ப்பு, வீறு குறையாமல் தொடர்ந்தது. அரசும் விட்டுக் கொடுக்கவில்லை. அடுத்த கல்வியாண்டிலும் இந்தி முதல் மூன்று படிவங்களுக்குக் கட்டாயப் பாடமாக இருந்தது; முதல் தலைமுறை மாணாக்கரின் கல்வியைப் பாழாக்கிற்று. கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டமும் நீடித்தது. நாட்டுக்கும் இரு சாரார்களுக்கும் தீமையான இந்தி வெறுப்பு உணர்ச்சி ஆழ வேரூன்றிக் கொண்டே இருந்தது. பெரியார் இல்லாத மாநாடு இதற்கிடையில் சென்னையில் தீவுத்திடலில், நீதிக்கட்சியின் பதினான்காவது மாகாண மாநாடு 1938 டிசம்பர் 29, 30, 31ஆம் நாள்களில் நடந்தது. மாநாட்டுத் தலைவர் எவர்? பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆவார். == அதற்கு முந்திய மாநாடுகளுக்குத் தலைவர் பதவிக்கு இவர், அவர் என்று போட்டி இருப்பது உண்டு. இம்மாநாட்டின் போது பெரியார் ஈ.வெ. ராமசாமியை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரோ சிறையில் இருக்க நேர்ந்து விட்டது. எனவே, பெரியார் நேரில் கலந்து கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/573&oldid=787531" இலிருந்து மீள்விக்கப்பட்டது