பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 நினைவு அலைகள் எனவே அவரை, பெண் வீட்டாரோடு இருந்து அடையாளம் காட்டி, வரவேற்கும் வகையில் முன்னாளே வரும்படி எனக்கு அன்புக் கட்டளை யிட்டார்கள். அப்படியே சென்று உடன் இருந்து வரவேற்றேன். அந்தத் திருமணத்திற்குப் பிறகு, மாவட்ட ஆட்சிக் குழுவிற்குத் தேர்தல் வந்தது. அதில் திரு. அளகேசன் காங்கிரசின் சார்பில் போட்டி போட்டு உறுப்பினராக வெற்றி பெற்றார். அதன்விளைவாக, ஆட்சிக்குழுவின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆலந்துர் ஏ.எஸ். துரைசாமி ரெட்டியார் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்செய்தியைக் கேட்டதும் திரு. ஒ.வி. அளகேசன் அவர்களுக்குப் பாராட்டுக்கடிதம் எழுதினேன். அதில் அளகேசனை தங்களுக்கு என்று குறிப்பிட்டேன். அவர் உடனே பதில் எழுதினார். அதில் இனிமேல் தங்களுக்கு என்று எழுதினால் பதில் எழுத மாட்டேன். பழையபடி நீ என்று எழுதினால் மட்டும் கடிதத்தைப் படிப்பேன்’ என்று உரிமையுடன் எழுதினார். நான் அதோடு விட்டுவிடவில்லை. அதற்குப் பதில் எழுதினேன். என்ன பதில்? 'பதவிக்குரிய மதிப்பு வேறு; நட்புக்குரிய உரிமை வேறு தாங்கள் துணைத் தலைவராக இருக்கும் இவ்வமைப்பில் நான் ஊழியன். கடிதப் போக்குவரத்தில் இவ்வுறவின் அடிப்படையில் மட்டுமே எழுதுவேன். 'நாம் வெவ்வேறு நிறுவனங்களில் இருக்க நேர்ந்தால், பழைய முறையில் ஒருவரை ஒருவர், 'நீ என்று அழைப்பதைப் பற்றிச் சிந்திப்போம். இப்படி எழுதினேன். இருவரும் வெவ்வேறு நிறுவனங்களுக்குப்போன பிறகும் நீங்கள் என்று அழைப்பதையே கைக்கொண்டேன். அம்மரியாதையை அளகேசனோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மற்றவர்களையும் நீங்கள் என்று மரியாதையோடு அழைக்கத் தொடங்கினேன். எவரையும் இவன்' என்று குறிப்பிடுவதில்லை. தமிழில் 'அவன் அவர் என்ற சொற்களுக்குப் பதில் அவர் என்ற சொல்லும் நீ. நீங்கள் என்பதற்குப் பதில் நீங்கள் என்னும் ஒரே சொல்லும் இருக்கவேண்டு மென்னும் கருத்தைக் கொண்டுவிட்டேன். இப்பண்பாட்டை எப்படிக் கற்றேன்? சென்னையில் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி மாணவனாக இருந்தபோது, பெரியார் ஈ.வெ.ரா. வைப் பலமுறை, குத்துளசி குருசாமியார் வீட்டில் காணும் வாய்ப்புகள் கிடைக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/577&oldid=787535" இலிருந்து மீள்விக்கப்பட்டது