பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54C) - நினைவு அலைகள் செல்லும் போது, நீங்கள் பெரியார் கட்சிக்காரராம். அதனால் எங்களோடு கோவிலுக்கு வரச்சொல்வி அழைக்கவில்லை என்று கூறிவிட்டு, விடை பெற்றுக் கொண்டார். சில நாள்கள் ஓடின. அலுவல் பற்றிச் சைதாப்பேட்டைக்குப் போக நேர்ந்தது. சற்று முன்னதாகச் சென்று திரு. சங்கரலிங்க தாசை அவர் இல்லத்தில் கண்டேன். காப்பி கொடுத்துவிட்டு, 'வகுப்பு வாரி அடிப்படையில், பார்ப்பனரல்லாதாரை மாவட்டக் கல்வி அலுவலராக, நேரடியாகத் தேர்ந்து எடுக்கும் முறை எப்போது வருமென்று கண்டுபிடித்துள்ளேன். அடுத்த நேர் முகத் தேர்வுப் பதவி பார்ப்பனரல்லாதாருக்கு. குறைந்தது ஒராண்டில், அதிகமானால் ஈராண்டிற்குள் வரலாம். 'முன்னர் நான் கூறிய படி, எல்லா நிலைகளுக்குமான தேர்வுகளை அடுத்து அடுத்து எழுதிவிடுங்கள்' என்றார். அப்படியே செய்கிறேன் கீழ்நிலையில் இருப்பவனை. மேல் நிலைத் தேர்வு எழுதுவதற்கு விடுவார்களா, என்று கேட்டு வைத்தேன். 'மேல் நிலைக்குப் போனபின், எழுதுவதானால், கட்டணம் கிடையாது. அதற்கு முன்பே எழுதக் கட்டணம் உண்டு. கட்டணத்தைப் பொருட்படுத்தாது, தேர்வுகளை எழுதி விடுங்கள்' என்று மீண்டும் ஆலோசனை கூறியனுப்பினார். பக்கச்சொல் பதினாயிரம் பெறும் என்பது உண்மையாயிற்று. இந்நாட்டு மரபுப்படி திரு. சரங்கரலிங்க தாசும் மற்ற இருவரும் ஒரு சாதியினர். நான் வேறொரு சாதிக்காரன். அவர்கள் வைதீகர்கள்; நான் பகுத்தறிவு வாதி. எங்களுக்குள் நீண்ட தொடர்பு இல்லை. இரு தாககளும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் போற்றத் தக்க அக்கறையோடும் ஆர்வத்தோடும் எனக்கு நல்ல உதவி செய்தார்கள். பெரியவர் சங்கரலிங்தாசு தக்க நேரத்தில் நல்வழி காட்டினார். அந்த வழிகாட்டல் இல்லையென்றால், நான், நேர்முகத் தேர்வில், மாவட்டக்கல்வி அலுவலராகி இருக்க மாட்டேன். இப்போது பொதுக்கல்வி இயக்குநராகவோ, தலைமைக்கல்வி ஆலோசகராகவோ, துணைவேந்தராகவோ வளர்ந்திருக்க முடியாது. நாற்பது, அய்ம்ப தாண்டுகளுக்கு முன் அலுவல் பார்த்த பல பார்ப்பனரல்லாதாருக்கு, உட்சாதி உணர்வு குறைவு; சமுதாயக் கண்ணோட்டம் பெரிது. பிற தம்பியரை வளர்ப்பதில் முனைப்பு அதிகம் பயன் கருதா உதவி புரிவதில் ஆர்வம் நிறைய. அவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் திரு. சங்கரலிங்கதாசு. அதில், முந்தியவருக்கு அடுத்தபடி, திரு. ரகுபதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/583&oldid=787542" இலிருந்து மீள்விக்கப்பட்டது