பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54- நினைவு அலைகள் தலைமையகம் இரு பெட்டிகளை ஆயத்தமாக வைத்திருந்தது. அவை போதா என்றேன். ஏன்? தேர்தல்களில் திடீர்த் திருப்பங்கள் ஏற்படக் கூடுமென்று அப்போதே உணர்ந்திருந்தேன். ஒருவர் வேட்பாளர்; அவருடைய பெயரை முன் மொழிய ஒருவர், பின் மொழிய ஒருவர். ஆக மும்மூன்று பெயர்கள் ஒன்றாகி விட்டால், மூன்று வேட்பாளர்களுக்கும் ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று சொல்லி, மூன்று பெட்டிகளை வாங்கி வந்தேன். இந்த அளவு முன் யோசனையே, உறுப்பினர்களிடையே என் மதிப்பை உயர்த்திவிட்டது. தேர்தலைச்செம்மையாக நடத்த முடிந்தது. அய்யங்கார் ஒருவர் வெற்றிபெற்றார். அவர் பெயர் இப்போது மதுராந்தகத்திற்கு மாற்றல் கல்வித்துறையின் கடைசி நிலைப்பணிக்குக் காத்துக்கிடந்தநான், திருப்பெருப்பூதூரிலிருந்து, மதுராந்தகத்திற்குத் துணைப் பஞ்சாயத்து அலுவலராக மாற்றப்பட்டேன். அப்பிரிவில், மதுராந்தகம் வட்டம், செங்கற்பட்டு வட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் பாதி சேர்ந்திருந்தது. மாற்றல், திடீரென வந்தது. இளமை தொட்டே எதற்கும் ஆயத்தமாக இருக்கும் இயல்பு வந்துவிட்டதால் சுணங்காமல், மூட்டை கட்டிக்கொண்டு, புதிய இடத்திற்குப் புறப்பட்டேன். புதிய இடத்து நடவடிக்கைகளைக் குறிப்பிடுவதற்கு முன், திருப்பெரும்பூதுரில் எனக்கு உதவியாக இருந்த இருவரைக் குறிப்பிடவேண்டும். அவர்கள் யார்? கடைநிலை ஊழியர்கள். முதலில் முருகேசன் என்பவர் என் ஊழியராக இருந்தார். அவர் மாறுதலாகிச் சென்ற பின் லோகநாதன் என்பவர் அடுத்து வந்தார். இருவரும் இளைஞர்கள். இருவரும் வஞ்சனையின்றி ஊழியஞ் செய்தனர்; நாணயமாகவும் இருந்தார்கள். அவர்களில் லோகநாதன் என்பவர் என்னைக் கண்ணினைக் காக்கும் இமைபோல் காத்தார் என்றால் மிகையாது. நான் சாதி வேற்றுமை பாராட்டாமல் எல்லார் உணவையும் உண்ட சமத்துவப் போக்கால் லோகநாதன் கவரப்பட்டு, என்னிடம் மரியாதை மட்டுமல்ல, 'பக்தியே கொண்டிருந்தார். மதுராந்தகத்தில் எனக்கு ஊழியராக வாய்த்தவர் மேகவர்னம் என்பவர். அவருக்கு அப்போது அய்ம்பது வயது போல் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/585&oldid=787544" இலிருந்து மீள்விக்கப்பட்டது