பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 - நினைவு அலைகள் அவ்வப்போது, எந்தக் குற்றச்சாட்டிற்காகிலும் பதிவு ஆதாரங்களோ, ஆள் ஆதாரங்களோ கூறியிருந்தால், அதையும் குறித்துக் கொண்டேன். நல்ல மாணவர், தேர்வுக்கு ஆயத்தமாவதுபோல் நான் புலன் விசாரணைக்கு ஆயத்தமானேன்! ஏன்? எவர்மேலோகுற்றச்சாட்டுகள்கூறப்படும். அவற்றை விசாரித்தல், அவரைத் தொல்லைப்படுத்துவதைவிட, விசாரிப்பவரையே அதிகம் காய்ச்சும். விசாரிப்பவரே அதிகம் புடம் போடப்படுவார். குற்றச்சாட்டுகளின் கோப்பு வந்ததும் என்னுள் கேள்விகள் பிறந்தன. என்ன கேள்விகள்? வந்த சூட்டோடு, அக்கோப்பை எடுத்துக்கொண்டு, விசாரணைக்கு விரைவதா? பலநாள்கள்ஆறப்போட்டுப்பிறகு விசாரணைக்குச்செல்வதா? உடனே விரைவதும் நல்லதல்ல; காலதாமதம் செய்வதும் சரியல்ல. முந்தியது, சாக்குக் கிடைக்குமா வென்று காத்திருந்தான் என்று என்மேல் பழி கூற ஏதுவாகும். பல நாள் தாமதித்தால் தொடை நடுங்கி என்னும் அவதூறுக்கு ஆளாக நேரிடலாம். இப்படி எனக்குத் தோன்றிற்று. எனவே, விசாரணைக்குப் பத்து நாள்கள் முன்னறிவிப்புக் கொடுத்து, உத்திரமேரூர் பஞ்சாயத்துத் தலைவருக்குப் பதிவு அஞ்சலில் கடிதம் அனுப்பினேன். நான்கைந்து நாள்களில் அவரிடம் இருந்து கடிதம் வந்தது. விசாரனைக்காக நான் குறிப்பிட்ட நாள்களில் அவரும் துணைத்தலைவர் ஆராவமுது அய்யங்காரும் வெளியூர்களில் இருக்கவேண்டியுள்ளதாகவும் அதனால் விசாரனை மேலும் சில நாள்களுக்குத் தள்ளிப் போடுமாறும் கேட்டிருந்தார். அதற்கு இசைந்தேன்; வேறு நாள்களைக் குறித்துத் தகவல் கொடுத்தேன். அக்காலத்தில் மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் செல்ல ஒரே ஒரு பேருந்து வண்டியே இருந்தது. அது காலையில் மதுராந்தகத்திலிருந்து புறப்படும். இரவு எட்டு மணிபோல் மதுராந்தகம் வந்து சேரும். அப்பேருந்து வண்டி, விசாரணைக்கு ஆட்படவேண்டிய திரு. இராமசாமி அய்யருடையது. அதில் இடம் கிடைக்காவிட்டால் விசாரணைக்குக் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர முடியாது. அதேபோல் உத்திரமேரூரிலிருந்து திரும்பி வந்துசேர முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/591&oldid=787551" இலிருந்து மீள்விக்கப்பட்டது