பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55.2 நினைவு அலைகள் வண்டி புறப்படுவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே பேருந்து நிலையத்தை அடைந்தோம். அங்கே காத்துக்கொண்டு இருந்தோம். வண்டி வந்து நிற்கும்போது, சொல்லி வைத்தாற்போல் இரு விளக்குகளும் அனைந்துவிட்டன. பயணிகள் இப்படியும் அப்படியும் அலைமோதினார்கள். 'மேக வர்ணம், பெட்டி பத்திரம் என்று உரக்கக் கூறியபடியே நின்றேன். நடத்துநர், பஞ்சாயத்து அதிகாரி முன் இருக்கைக்கு வரவும்: என்று கத்தினார். பெட்டியை என் காலடியில் வைப்பதுபோல் பாசாங்கு செய்து விட்டுப் பின்னால் உட்கார்ந்த மேகவர்னம் தன் காலடியில் வைத்துக்கொண்டார். - வண்டி புறப்படுமுன், இரண்டு முறை மேகவர்ணம் பெட்டியைக் கவனித்துக் கொள் என்று கூறி நடித்தேன். நான் எதிர்பார்த்ததுபோல இரண்டு மூன்று குண்டர்கள் மேகவர்னம் வரிசைக்கு நேர் கீழே நின்று கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே, நான் மேகவர்னத்தை விழிப்பூட்டியிருந்தேன். அதையொட்டி அவர் வரிசையின் நடுவில் உட்கார்ந்துகொண்டு பெட்டியைக் கால்களால் அழுத்திக்கொண்டு குனிந்து கைகளையும் அதன்மேல் ஊன்றியிருந்தார். எப்படியோபெட்டிதப்பிற்று. அது களவு போவதற்கு முன் பேருந்து புறப்பட்டது. வழியிலே பிறர் மறிப்பார்களோ என்றுகூட நினைத்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. பாதுகாப்பாக வீடு போய்ச் சேர்ந்தோம். விசாரணைக்காகப் பட்ட பாட்டைவிட அதிகம் அறிக்கையை எழுதுவதில் படவேண்டியிருந்தது. குற்றச்சாட்டுகளை மீண்டும் இருமுறை படித்தேன், அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, நேரில் சேகரித்த தகவல்களைக் கொண்டு மறுபடியும் உரைத்துப் பார்த்தேன். ஆதாரமில்லாதவை என்று சிலவற்றைத் தள்ளிவிடலாம்; பிழையென்று சிலவற்றைக் கருதலாம்; குற்றங்கள் என்று இரண்டு மூன்றைக் கொள்ளலாம். இம் முடிவுகளுக்கு வந்தேன். அவற்றை எழுதவேண்டும். அந்த அறிக்கைக்கு இன்னொரு படியும் எடுக்கவேண்டும். என் அலுவலகத்தில் எழுத்தர் கிடையாது. ஆகவே நானே என் கைப்பட எழுதவேண்டியிருந்தது. அய்ம்பது முழுப் பக்கங்கள் கையொடிய எழுதினேன். அதைப் படித்துப் பார்த்துச் செப்பஞ்செய்தேன். அப்படிச் செப்பஞ்செய்கையில் சொற்களை அளந்து போடக் கற்றுக்கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/595&oldid=787555" இலிருந்து மீள்விக்கப்பட்டது