பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 நினைவு அலைகள் போராட்டமொன்றிற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அது என்ன போராட்டம்? பொதுத் தெருக்களில் எல்லாச் சாதியரும் நடக்கும் உரிமை பெறவேண்டும் என்பதற்காகப் போராட்டம். இதிலும் நாகம்மையாரும் கண்ணம்மாளும் பங்கு கொண்டார்கள். பெரியார் இருமுறை சிறைப்பட்ட பிறகு வெற்றி பெற்றார். வைக்கம் வீரராம் இராமசாமிக்கு இந்திய விடுதலையே சிந்தனையாயிருந்தது. இந்தியர்களுக்குள் ஒற்றுமையின்மையே விடுதலையைத் தாமதப்படுத்துவதாக உணர்ந்தார். வகுப்புரிமையைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டால் ஒற்றுமை வளரும்; வலிமை பெருகும்; விடுதலை விரைந்து வந்து சேரும். இது பெரியார் மதிப்பீடு. எனவே, காங்கிரசில் சேர்ந்தது முதல் வகுப்புரிமை ஆதரவ கிாட்ட இடைவிடாது முயன்றார். ஆறாண்டிற்குப் பிறகு அதைப் பற்றிப் பேசவும் இடங் கொடாதிருந்த காங்கிரசை விட்டுத் தீரத்துடன் விலகினார். அது பெரிய தியாகமாகும். வெளியே வந்ததும் தன்மான இயக்கத்தைத் தொடங்கினார். சூறாவளிப் பயணங்களை மேற்கொண்டார். கல்லடியையும் சொல்லடியையும் பொருட்படுத்தாது சாதி ஒழிப்பு, சமத்துவ உணர்வு முதலியவற்றை மக்கள் அறிவில் ஊற வைத்தார். எல்லோர்க்கும் வாழ்வளிக்க வகுப்பு உரிமை மட்டும் போதாது; சமதர்ம வாழ்க்கை முறை தேவை என்பதை 1930லேயே கோடிட்டுக் காட்டினார். - பெரியாரைப் போலச் சமதர்மத் தொண்டினைச் செய்தவர் தமிழகத்தில் இல்லை என்பது மிகையல்ல. அதற்காக அவர் சிறைப்பட்டதும் வியப்பல்ல. கொள்கைக்காக இன்னல்படுவது அவர் இயற்கை. வாழ்நாள் முழுவதும் மக்களிடையே பகுத்தறிவை வளர்க்கவும் அவர்களைச் சமத்துவ மக்களாக்கி, எல்லோரும் வாழும் நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்ட பெரியாரின் கொள்கையை மணந்து கொண்ட எனக்கு, 'என் சாதி'யில் பெண்பார்க்கும் எண்ணமே கசப்பாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/603&oldid=787565" இலிருந்து மீள்விக்கப்பட்டது