பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 நினைவு அலைகள்

=

அவரோ, அவரிடம் வேலை பார்ப்போரோ அடிக்கடி ஏதாவதொரு வேலை பற்றி மதுராந்தகம் வந்து செல்வதுண்டு. அந்தச் சமயங்களில் முத்துமல்லா பெரும்பாலும் என்னை வந்து பார்த்துப் பேசிவிட்டே போவார். அவ்வப்போது சுவையான தின்பண்டங்கள் அவர் வீட்டிலிருந்து வரும். என் மதுராந்தகம் வாழ்க்கையை இனியதாக்கியது அவருடைய நட்பு. அது இன்றும் தொடர்கிறது. அண்மையில் முத்து விழாக் கண்ட, கயப்பாக்கம் திரு. முத்துலிங்கர், மல்லாவின் அண்ணார். அவர் என்னிலும் பன்னிரண்டு ஆண்டு மூத்தவர்; தன் தம்பிகளிடம் காட்டும் பரிவினை என்பால் காட்டினார். இப்படிப் பெருமளவு நிறைவோடு பணியாற்றி வருகையில் சிறிய சிக்கல் ஒன்று வந்தது. காஞ்சிபுரம் வட்டம் ஆற்பாக்கம் திரு. திருமாகறல் முதலியார் என்பவர். அவர் என் நெருங்கிய உறவினர், தாய் மாமன் திரு. சுந்தர சேகரனை எதிர்த்து, மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். அவ்வூர், என் கண்காணிப்பில் வந்தபோது அங்கே பொது மக்களுக்குள் சிறு கீறல் வீழ்ந்தது. அது புகார்க் கடிதமாக வெளிப்பட்டது. - அப்படி நடந்தது மாவட்டக்குழுவின் பொதுத் தேர்தலுக்கு முன், அப் புகாரை விரைவில் விசாரித்து, குறை காணும் படி, என் குணத்தை அறியாத உறவினர் ஒருவர், என் காதைக் கடித்தார். தாராட்சியின் தலைவர் அப்படியொருவரை முதுகில் குத்த என் மனம் ஒப்பவில்லை. எனவே, தேர்தல் முடிந்த பிறகே, விசாரணைக்குப் போனேன். குற்றம் ஒன்றும் கண்டிலேன். பாவமில்லாவிடத்தும் பழி சொல்லிற்று சிற்றுார் உலகம். எனக்கு வந்த கடிதம் இளநிலை பள்ளித்துணை ஆய்வாளர் பதவிக்கு என்னை நியமிக்கும் ஆணைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன். அது வரவில்லை. ஆனால், எதிர்பாராத ஒருகடிதம் வந்து சேர்ந்தது. ஒருநாள் அஞ்சல் கட்டை, வழக்கம் போல், ஆவலோடு பிரித்தேன். அஞ்சல் உறை ஒன்றைக் கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/605&oldid=787567" இலிருந்து மீள்விக்கப்பட்டது