பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 நினைவு அலைகள் அதையும் சில நாள் ஊறுகாய் போட்டு வைத்தேன். பிறகு.? பதில் எழுதினேன். என்ன பதில்? 'எங்கள் பழமையான சங்க இலக்கியத்தில் தலைவி தலைவன் மேற்கொள்ளும் காதலை, தோழியொருத்தி வழியாகச் சொல்லியனுப்புவதே மரபு என்று கற்றிருக்கிறேன். 'அதனால் உம்முடைய கடிதம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லை. அதே நேரத்தில் என்னை வியப்பில் மூழ்க வைத்தது. 'உம் தோழி, என்னைப்பற்றி எவ்வளவு புரிந்து கொண்டிருக் கிறாரோ எனக்குத் தெரியாது. s நான் சாதி உயர்வு தாழ்வில் நம்பிக்கை அற்று இருப்பதைப் போன்றே, செல்வர் ஏழை என்னும் வேறுபாட்டிலும் பற்றற்று இருக்கிறேன். - நான் பிறவி பற்றி, சமுதாய ஏணியின் உச்சிப் படிக்கட்டில், இல்லாவிடினும் அதற்கு அடுத்து நிற்பதை, குற்றமாகவே கருதுகிறேன். அதே போன்று எவரோ, எப்போதோ ஏற்படுத்தி விட்ட பொருளியல் முறை எனக்கு உதவியாக இருப்பதால், அதைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதும் குற்றம் என்பது என்னுடைய உறுதியான முடிவாகும். 'அப்படியானால், சாதியில் மேல் கீழ் பாராட்டாத ஒருவனோடு வாழ்க்கை நடத்துவதைப் போன்றே, செல்வத்தைப் பொருட்படுத்தாத, குவிக்க இசையாத ஒருவரோடு வாழ்க்கை நடத்த நேரிடும் என்பதை உம் தோழி உணர்ந்திருக்கிறாரோ என்னவோ? 'சமதர்ம சமுதாயத் தொடக்கத்தில் இருக்கக்கூடிய தனியாள் பொருளைக் காட்டிலும் அதிகமான செல்வம் என்னிடம் இருப்பது 2) САГУТGN) LI). ஆனால் அது ஒழிய வேண்டுமென்று விழைகிற நான், அதைக் கொண்டு சராசரி மனிதனைக் காட்டிலும் வளமான வாழ்வு வாழ விரும்பவில்லை. சாதிவிட்டு வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ள விழையும் உம் தோழி, அதனால் தம் உறவினர்களின் தொடர்பை இழக்க நேரிடும். அதோடு என்னை மணப்பதால் எளிய வாழ்க்கையையும் மேற்கொள்ள நேர்ந்தால் வருந்த மாட்டாரா? 'என் பெற்றோர் செல்வத்தை நம்பி வாழக்கூடாதென்ற உறுதிபூண்டுள்ள என் எதிர்காலம் எப்படியிருக்கும்? 'இன்று திங்களுக்கு எழுபத்தைந்து ரூபாய் ஊதியம் பெறுகிறேன். விரைவில் கல்வித்துறையில் இளந்துணை ஆய்வாளனாகப் போகலாம். அப்போது ஊதியம் அய்ம்பது ரூபாய்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/609&oldid=787571" இலிருந்து மீள்விக்கப்பட்டது