பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 567 'கல்வித்துறையின் கடைசிப் படிக்கட்டில் காலெடுத்து வைத்தால், மெல்ல உயரப் பல்லாண்டுகள் பிடிக்கும். 'அப்படியென்றால், உம் தோழியும் என்னைப் போன்றே எளிய சிக்கன வாழ்க்கை நடத்த வேண்டும். 'இவற்றையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த பிறகு தான் என்னை மணக்க விரும்புகிறாரா? 'இளமையை மட்டும் கருத்தில் கொண்டு, மன வாழ்க்கையை ஏற்பது சரியல்ல. நீண்ட வாழ்க்கை வாழக்கூடும் என்று எண்ணி, முழுமையையும் மனக் கண்களில் கொண்டுவந்து, சிந்தித்து முடிவுக்கு வருவதே முறை. 'இதை உம் தோழிக்குச் சொல்லி, தேவைப்பட்டால் பதில் எழுதவும்' இப்படிக் கடிதம் எழுதினேன். 83. காந்தத்தைச் சந்தித்தேன் எனக்கு வந்த பதில் சில நாள்கள் சென்றன. என் கடிதத்திற்குப் பதில் வந்தது. எழுதியது எவர்? அதே தோழி தான். கடிதத்தின் உள்ளடக்கம் என்ன? நான் என்னைப்பற்றி எழுதிய தகவல்கள் அவருடைய தோழிக்குத் தெரியும். பெரிய மனிதனாவே னென்றோ, பணக்காரன் ஆவே னென்றோ எதிர்பார்த்து என்மேல் விருப்பம் கொள்ளவில்லை. 'உங்கள் முற்போக்குக் கொள்கைக்காகவே உங்கள்மேல் பற்று ஏற்பட்டது. நீங்கள், வெற்றிலை, சிகரெட் போன்ற எவ்விதப் பழக்கத்திற்கும் அடிமையாகவில்லை என்பதையும் கவனித்திருக் கிறோம். இளமையின் குறும்பால், உங்களை முழுமையாக மதிப்பிடாமல், உங்கள்பால் பற்றுக் கொள்ளவில்லை. 'எனவே, காந்தம்மாவைப் பொறுத்த மட்டில் நீங்கள் வாழ நினைக்கிற எளிய வாழ்க்கைக்கு இசைந்தே, என்னை எழுதச் சொன்னார். 'நீங்கள் காந்தம்மாவை நேரில் கண்டு பேச உடன்படுவீர்களா? அப்படிப் பேசினால், உங்களுக்கு உண்மை நிலை புலப்படலாம். நேரில் பேச விரும்பினால் ஏதாவது ஒரு வேலை நாளில், சென்னை பல்கலைக்கழக தாவர இயல் ஆய்வுக்கூடத்திற்கு வந்து காணலாம். காலை பத்து மணி முதல் மாலை அய்ந்து மணிவரை அங்கிருப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/610&oldid=787573" இலிருந்து மீள்விக்கப்பட்டது