பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 569 அலுவல் பற்றி வருவோரிடம் அடக்கமாகப் பதில் கூறுவாரா என்பதை எண்ணினேன். சாந்தமே உருவானவர் காந்தம் என்று தோன்றியது. சரி, எதிர்பாராத வகையில் நான் பெரிய அலுவலராகி விட்டால், அப்போது தொடர்பு கொள்வோரிடம் பண்போடு நடந்து கொள்ளத் தெரியுமா என்பது அடுத்த சிந்தனை. என்னிலும் அதிகம் கற்றுப் பண்பட்டிருப்பதால் பெருநிலைக்கும் ஏற்ற மாண்பு இருக்கும் என்று முடிவு செய்தேன். மற்றோர் அய்யப்பாடு என்னுள் எழுந்தது. அது என்ன? நான் சிறிய அலுவலராகவே இருந்து விட்டால், இவ்வளவு படித்த காந்தம், வீட்டு வேலைகளை மனமுவந்து செய்வாரா, நொந்து கொள்வாரா? இதற்கும் பளிச்சொன்று பதில் மின்னிற்று. என்ன பதில்? சுப்பிரமணியத்தின் பெண்கள் மூவருமே படித்தவர்களாக இருப்பினும் வீட்டு வேலைகளைச் செய்ய எவரும் தயங்கியதில்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்து, சம்பாதித்துக் கொண்டிருந்த குஞ்சிதம் உட்பட எல்லோருமே தாயார் தங்கம்மாளுக்கு உதவியாகப் பரிமாறுவதற்கோ இலைகளை எடுத்துப் போடுவதற்கோ, பிற வேலைகளைச் செய்வதற்கோ பின்னடைய மாட்டார்கள். சிலவேளை இதை நேரில் கண்டிருக்கிறேன். பலவேளை அதுவும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின்போது - பட்டுக்கோட்டை அழகிரிசாமி, மாயூரம் எஸ்.வி. லிங்கம், பூவாளுர் அ. பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார் போன்றவர்கள். தங்களுக்குள் பேசிக் கொள்வதை நான் கேட்க நேரிட்டதுண்டு. அக் காலகட்டத்தில், அறிஞர் அண்ணா அடிக்கடி குருசாமி வீட்டிற்கு அதாவது சுப்ரமணியம் வீட்டிற்கு வருவதுண்டு. அப்படி வருகையில் ஒய்வு கிடைத்தால் அண்ணா, சுப்பிரமணியம், குருசாமி, குஞ்சிதம் ஆக நால்வாகம் கெடுகோம் சீட்டாடிக் கொண்டிருப் பார்கள். அவர்களுக்கு வேண்டிய தேனிர் போட்டுக் கொண்டே இருப்பது தங்கம்மாவின் வேலை. ஊற்றிக் கொண்டு வந்து கொடுப்பது பெண்களின் பொறுப்பு. இவற்றையும் கேள்விப் பட்டிருந்தேன். இரண்டொருமுறை வேலையாள் வராதபோது, அந்தப் பெண்கள் வீடு பெருக்கும்போது பார்த்திருக்கிறேன். எனவே வீட்டு வேலை செய்ய வேண்டியிருந்தால், அதை இழிவாகக் கருதமாட்டாரென்று எனக்கு நானே பதில் சொல்லிக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/612&oldid=787575" இலிருந்து மீள்விக்கப்பட்டது