பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 57.1 'அவர் விருப்பம் நிறைவேறாது. நான் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பின்னர் செய்தித் தாள்களில் அறிவித்து விடவே எண்ணியுள் ளேன்' என்றேன். 'எப்போது திருமணத்தை வைத்துக் கொள்ள உத்தேசம்?' என்கிற கேள்வி அடுத்து எழுந்தது. 'மாவட்ட ஆணைக்குழுவின் ஊழியனாக - பஞ்சயாத்து அலுவலாராக இருக்கும்போது இப்படிப்பட்ட திருமணம் செய்து கொண்டால்; பழகியவர்களில் சிலராவது என்னைப் புண்படுத்த வெறுக்க- பகைக்க நேரிடலாம். 'இளநிலை ஆய்வாளர் பதவி கிடைத்தால் அநேகமாகப் பிற மாவட்டங்களில்தான் வேலை பார்க்க நேரிடும்; பழகியவர்களோடு மோதும் நிலை ஏற்படாது' என்று கோடு காட்டினேன். அப்போது, சிற்றுண்டி வந்தது. அதை உண்டோம்; எட்டி இருந்தே உண்டோம். பிறகு, 'ஆய்வு முடியட்டும்; அதற்குள் எனக்கும் புதிய பதவி கிடைத்து விடலாம். 'அப்பொழுது மற்றதைப்பேசிக்கொள்ளலாம். இப்போதைக்கு இது எவருக்கும் தெரிய வேண்டாம்' என்று கூறிவிட்டு, நெருங்காமலே விடை பெற்றுக் கொண்டேன். 84. இரண்டாவது உலகப் போர் கல்வித் துறைப் பணி எதிர்பார்த்தேன்! ஏங்கினேன் எதை? எதற்கு? இளந்துணை ஆய்வாளராக என்னை நியமிக்கும் ஆணையை எதிர்பார்த்தேன். துணைப் பஞ்சாயத்து அலுவலர் பதிவியிலிருந்து விலகும் வாய்ப்பிற்கு ஏங்கினேன். அத்தகைய விலகல் வாய்ப்பு, இரட்டிப்புபலன் கொடுக்கக் கூடியதாகத் தோன்றியது. உள்ளாட்சிகளைப் பாழ்செய்து வந்த கட்சிப் பூசல்கள் என்னைத் தாக்குவதற்கு முன்னரே, தப்பி வெளியேறிவிடலாம் என்பது மட்டுமே, முதலில் என் எதிர்ப்பார்ப்பு. திருமண வாய்ப்புக்கும் அது துணையாகும் என்று தோன்றியபோது, எதிர்பார்த்துக் கொண்டிருந்த அலுவல் இப்போது மேலும் கவர்ச்சி யுடையதாகத் தோன்றிற்று. "புகழ் என்னும் நல்லாள் தேடுவாரை விட்டு ஓடுவாள். பொருட்படுத்தாதவரைத் தேடித்தேடி வருவாள்' என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/614&oldid=787577" இலிருந்து மீள்விக்கப்பட்டது