பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 நினைவு அலைகள் நான் தேடிய கல்வித் துறையின் கடைசி நிலைப்பணியும் என்னை நெருங்க நெடுநாள் அஞ்சியது. ஆணை பிறப்பிக்க வேண்டியவர் மதுரைப் பிரிவுப் பள்ளிகளின் ஆய்வாளராகிய திரு. ஜி.எல். லோபோ என்பவர். அந்தக் காலத்திலும் பல ஆணைகள், செல்வாக்குடையோர் பரிந்துரைக்குப் பின்னரே நகரும். எனவே, கயப்பாக்கம் திரு. முத்துலிங்கா ரெட்டியார் அவர்களின் உதவியை நாடினேன். அவரிடம் வேலை பார்த்த அய்யங்கார் ஒருவர் மதுரைப் பிரிவு அலுவலகத்தின் நிர்வாகி திரு. எம்.கே. வரதாச்சாரிக்குப் பரிந்துரைத் தார். அடுத்தடுத்து நினைவு படுத்தினதாகத் தகவல். ஆனால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை. இரண்டாவது உலகப்போர் இதற்கிடையில் 1939ஆம் ஆண்டிலேயே இரண்டாவது உலகப்போர் தொடங்கிவிட்டது. பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் ஓரணியில் நின்றன. போர் தொடுத்த ஜெர்மனிக்குத் துணையாக, இத்தாலி, ஜப்பான் ஆகியவை எதிரணியில் நின்றன. ஜெர்மானிய நாட்டின் சர்வாதிகாரி, இட்லர், ஜெர்மானியர்கள் ஆரிய இனத்தவர்; உயர்ந்த இனத்தவர்கள். ஆகவே உலகையாள உரிமை உடையவர்கள்' என்னும் நச்சுக் கருத்தினைத்துவிப் பயிரிட்டிருந்தான். ஜெர்மானியப் படைகளை விரிவு படுத்திக் கடுமையான பயிற்சி கொடுத்த பின்னர் போரைத் தொடங்கினான். உலகம் முழுவதையும் பிடிக்கத் திட்டம் இட்டிருந்தான். இதை எதிர்பாராதிருந்த சில நாடுகள் மளமளவென்று சரிந்தன. பிரான்சு வீழ்ந்தது. பிரிட்டனுக்கு ஆபத்து மூண்டது. பிரிட்டனுக்கு வாழ்வா, சாவா என்னும் பயங்கர நெருக்கடி சட்" என்று உருவாயிற்று. 'ஆண்டிக்கு ஏன் அம்பாரக் கணக்கு 2 என்று எண்ணித் திகைக்கிறீர்களா? சற்றுப் பொறுத்து இருங்கள். நெடுங்காலத்திற்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படும் குருச்சேத்திர பாரதப் போரின்போது தெற்கில் தொலைவில் ஆண்ட தமிழ் மன்னன், படைகளுக்குச் சோறளித்ததாகப் படித்திருக்கிறோம். அன்றைக்கே, போர் என்பது போரிடும் இரு சாராரை மட்டு மல்லாது, மற்றவர்களையும் பாதித்தபோது இருபதாம் நூற்றாண்டுப் போர்கள் எவர் எவரையெல்லாமோ பாதித்தன; குழந்தை குட்டிகளைப் பாதித்தன. பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் கேடு விளைவித்தன. இது நேரடி விளைவு. அதன் பின்விளைவுகள் எத்தனையோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/615&oldid=787578" இலிருந்து மீள்விக்கப்பட்டது