பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 நினைவு அலைகள் இருப்பினும் எளியோராடும் இனிமையாகப் பழகும் இயல்பினர் சமுதாய ஏணியின் கீழ்ப்படிக்கட்டுகளில் கிடந்து தவித்த தாழ்த்தப் பட்டோர் படிப்புப் பெற உதவியவர். தஞ்சை மாவட்டத்தில் அக்காலத்தில் சமுதாய எழுச்சியை ஊட்டியவர்களில் சர்.ஏ.டி. பன்னிர் செல்வம் முன்னே நின்று வழி காடடி வநதவா. அவர், லண்டனில் இருந்த இந்தியா மந்திரியின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்பொறுப்பினை அவர் ஏற்றுக் கொள்வது பார்ப்பனரல்லாதார் நலத்திற்கு நல்லது என்று கருதப்பட்டது. எனவே, அவர் லண்டனுக்குப் பயணமானார். சென்னையிலிருந்து பம்பாய்வரை இரயிலில் சென்ற சர். பன்னிர்செல்வம் அங்கிருந்து வானவூர்தியில் லண்டனுக்குப் புறப்பட்டார். அது ஒமான்கடலைக் கடக்கும்போது, கடலுள் வீழ்ந்து விட்டது. தமிழ்ச்சமுதாயம் தமது சிறந்த பாதுகாவலர் ஒருவரை இழந்துதவித்தது. சர். பன்னிர் செல்வம் மறைவைக் குறித்துப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உருக்கமான பாடலொன்றைப் பாடினார். மாலையிட்ட மங்கை நல்லாளை, மணவாளர் மார்புறத் தழுவும் வேளை உயிர் நீத்தது போன்றிருந்ததாகப் பாடினார். அந்த இரங்கற் படாலில், 'சிங்கத்தை முறியடிக்கும் திறம் இல்லையென்றாலும் - சிங்கந்தான் பொங்குற்றே வீழ்ந்த தென்றால் நரிமனம் பூரிக்காதோ' என்று அவர் பாடியது தமிழர் உள்ளங்களையெல்லாம் உருக்கின. திருவாரூரில் நடந்த நீதிக்கட்சியின் 16ஆவது மாகாண மாநாட்டில் சர் ஏ.டி. பன்னீர்செல்வத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தபோது எண்ணற்றோர் கண்கள் குளமாயின. அவர்களில் பலர் அப் பெரியவரோடு நெருங்கிப் பழகியவர்கள்: அவர் தயவால் நன்மை பெற்றவர்கள். மாநாட்டில் இருந்த என் கண்கள் குளமாவானேன்? அவரோடு பழக்கம் இல்லாவிடினும் உணர்ச்சியால் கட்டுண்டு. அவரைச் சென்னை மையப் புகை வண்டி நிலையத்தில் இருந்து வழியனுப்பி யவர்களில் நானும் ஒருவன். மாநாட்டின் இரண்டாவது இரங்கல் முடிவும் என் உள்ளத்தை உலுக்கியது. தாலமுத்து, நடராசன் என்ற இரு கான்முளைகள், கட்டாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/619&oldid=787582" இலிருந்து மீள்விக்கப்பட்டது