பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/628

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 量 585 வண்டி புறப் பட்டதுமே பெரியார் அவர்கள் பேச்சைத் தொடங்கினார். 'எஸ்.ஜி. (சா. குருசாமி) எழுதியிருந்தார். படித்ததும் மெத்த மகிழ்ச்சி. உங்களைப் பற்றிக் காந்தம்மா வீட்டில் எல்லோருக்கும் நல்ல மதிப்பு. 'நீங்கள் காந்தம்மாவை மணம் செய்துகொள்வதற்கு உங்கள் பெற்றோர் இசைவார்களா? என்று பெரியார் பரிவுடன் கேட்டார். 'இசைய மாட்டார்கள்' என்றேன். 'அப்புறம் எப்படி?' 'என்னையே நம்பித்தான் திருமண ஏற்பாடு செய்யவேண்டும்' என்றேன். 'அப்படிச் செய்தால் எந்த உறவினர்களாவது வருவார்களா?' 'என் சுற்றத்தாரில், என் தந்தையே மிக முற்போக்குவாதி; அவரே ஒப்புக்கொள்ளாதபோது மற்றவர்கள் துணை வருவார்களென்று எதிர்பார்க்க முடியாது' என்றேன். "ஆமாம்! உங்கள் அப்பா ஏன் ஒப்புக் கொள்ள மாட்டாரென்று அஞ்சுகிறீர்கள்? உறவில் ஏதாவது பெண் பார்த்து வைத்திருக்கிறாரா?' என்று பெரியார் என்னை மடக்கினார். 'இப்போது இல்லை; முன்பு பணக்கார உறவினர் ஒருவர். பத்தாவது வரை படிக்க வைத்த பெண்ணை, நிறையப் பணத்தோடு எனக்குக் கொடுக்க முன்வந்தார். எங்கள் உறவில் அவரே பெரியவர். அதை மறுத்துவிட்டேன். 'அதனால் என் தந்தைக்கு என் மீது சினம். பிறகு என் சாதியில் பல பெரிய இடங்களில் இருந்து பெண் கொடுக்க முன் வந்தார்கள். 'பணமும் வேண்டாம்; செல்வாக்கும் வேண்டாமென்று சொல்லிக் கொண்டு இருக்கிற என் மேல், அவரைப் போன்ற சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு அடங்காத வெகுளி ஏற்படுவது இயற்கை' என்று அடக்கத்துடன் கூறினேன். நான் எவர் வழியாகவாகிலும் அவருக்குத் தூது அனுப்பிப் பார்க்கட்டுமா? பெற்றோர் இசைவு பெற்றுக் கலப்புத் திருமணம் செய்து கொண்டால், மேலும் சிறப்பாக இருக்குமே!' என்றார். என் முடிவு 'மன்னிக்கணும் அய்யா நீங்கள் சொல்வது மெய்யே. ஆனால், என் தந்தையிடம் அது பலிக்காது. என் விருப்பம் அவர்காதுக்கு எட்டினால், எப்படிப் போய் முடியுமென்று சொல்ல முடியாது' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/628&oldid=787592" இலிருந்து மீள்விக்கப்பட்டது