பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 587 நான் உறவினர்களிடமும் பரிவு உடையவன். அதனால், நான் கடைசி நேரத்தில் ஊசலாடக் கூடாது. 'அடுத்த காரணம் நான் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை, என் தாய் தந்தையர்உள்ளத்தைப் புண்படுத்தும். அவர்கள் இருவர் பேரிலும் நான் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறேன். என் தாயின் நிலையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. 'அவர் என்னைப்பெற்ற இன்பத்தைத் தவிர வேறு எவ்விதப் பயனும் என்னால் இதுவரை பெறவில்லை. 'இளமையின் இயற்கையால் திருமணச் சிக்கல் ஏற்பட்டிருந்தால் அதைச் சமாளிப்பது ஒருவகை. 'நானோ கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறேன். சாதி மனிதனாகப் பிறந்த நான், சாதியற்ற மனிதனாக வாழ்வ தென்று முடிவு செய்துவிட்டபின், கலப்புத் திருமணம் இன்றியமையாத தாகும். ' 'இதனால் எனக்கு மனநிறைவு ஏற்படும் அளவு பெற்றோர்களுக்கு வேதனையை விளைவிக்கிறேனென்ற கவலையும் கலந்துள்ளது. அவர்கள் வருத்தத்தைப் பெருக்கும் வகையில், அழைப்பினை அனுப்ப என் மனம் ஒப்பவில்லை' என்று தீர்மானமாகக் கூறினேன். 'சங்டம்தான் பெற்றோரிடம் பாசம் மிகுந்திருக்கும்போது இது தவிர்க்க முடியாத பெரிய சங்கடமே! 'சரி! உங்கள் விருப்பப்படியே அழைப்புக்கூட இல்லாமல், பதிவுத் திருமணமாகவே ஏற்பாடு செய்து விடுவோம். ஒரு சிறிய யோசனை: தாலி மட்டும் கட்ட ஒப்புக்கொள்ளுங்கள்' என்றார் பெரியார். 'அந்த அடிமை அடையாளம் எதற்குங்க! அய்யா வழியை முழுமையாகப் பின்பற்ற நினைப்பவனுக்கு வேறு பக்கம் கைகாட்டுகிறீர்களே! என்றேன். 'அந்தச் சமதாயம் பெரிதும் ஏமாற்றப்பட்ட சமுதாயம். தாலி கட்டும் அள்வு இசைந்தால் சிறிது நிறைவு இருக்கும். 'குருசாமி திருமணத்தில் நான் சொன்னேனென்று குஞ்சிதத்திற்குத் தாலி கட்டினார். இரண்டொரு ஆண்டுக்குப் பிறகு குருசாமி கருத்துப் படி குஞ்சிதம் குருசாமி அதைக் கழற்றி வைத்துவிட வில்லையா? 'அதைப்போல காந்தமும் செய்து விடலாம். திருமணத்தின்போது தாலிக்ட்டு வதற்கு இசையுங்கள்' என்றார். 'மன்னிக்கணும் அய்யா தாலிகட்டுகிற வேலையும் வேண்டாம். பி கு கழற்றுகிற வேலையும் வேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/630&oldid=787596" இலிருந்து மீள்விக்கப்பட்டது