பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 நினைவு அலைகள் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களைத் தலைமை வகிக்கும்படிதோழர் அ.பொன்னம்பலனார், எஸ்.வி. லிங்கம்ஆகியவர்கள் கேட்டுக் கொண்டார்கள். பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தலைவர், முன்னுரையாக மணமக்களைப் பாராட்டியும், ரிஜிஸ்டர் மனத்தின் சிறப்பைக் கூறியும் விரிவாகப் பேசினார். குமாரராஜா எம்.ஏ. முத்தையா செட்டியார் அவர்கள் மணமக்களைப் பாராட்டியும் சீர்திருத்தம், பொருளாதாரச் சிக்கனம் பற்றி விளக்கிக் கூறி, சுயமரியாதை இயக்கம் தமிழர்களை இத்தகைய சீர்திருத்த உணர்ச்சியைப் பெறும்படி செய்து வருகின்றதென்றும், பெரியார்.அவர்களின் சமூகச்சீர்திருத்த வேலைகளைப் பெரிதும் தமிழர்கள் ஆதரிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். தோழர் அ.பொன்னம்பலனார் அவர்கள், புதுவைத் தோழர் பாரதிதாசன் அவர்கள் (தமிழ்க் கவி) மணமக்களைப் பாராட்டிப் பாடிய தமிழ்ப் பாடல்களைப் படித்து மணமக்கட்குக் கொடுத்து, மலர் மாலைகள் சூட்டினார். அதன்பின் தோழர்கள் எஸ். முத்தையா முதலியார், நெல்லை வள்ளல் சிவஞான தேசிகர், டி. சண்முகம்பிள்ளை, டி.ஏ.வி. நாதன், சி.டி. நாயகம் ஆகியவர்கள் மனமக்களைப் பாராட்டியும், ரிஜிஸ்டர் மணத்தின் சிறப்புக்களைப் பற்றியும் கூறிச் சடங்குகள் ஒழித்தல், ஆடம்பரமான வீண் செலவுகளைக் குறைத்தல் பற்றியும் விரிவாகப் பேசினார்கள். மணமக்களிருவரும் ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்றி கூறினார்கள். பெரியார் முடிவுரையாக ஒரு மணி நேரத்திற்குமேல் சமூகச் சீர்த்திருத்த அவசியம் பற்றிப் பேசினார்கள். தோழர் அ. பொன்னம்பலனார் நன்றி கூற இரவு 8 மணிக்கு இக்கூட்டம் இனிது முடிந்தது. இக் கூட்டத்திற்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்திருந்தார்கள். நினைவில் நிற்கும் தலையங்கம் எங்கள்திருமணத்தை ஒட்டி அருமையான ஒரு தலையங்கமும் குடி அரசில் வெளியானது. குடியரசு ஈரோடு 1940 நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை காந்தம் - சுந்தரவடிவு வாழ்க்கை ஒப்பந்தம் தோழர் டி. சுப்பிரமணியம்பிள்ளை அவர்களின் புதல்வியும் தோழர் குஞ்சிதம் குருசாமி அம்மையாரின்தங்கையும் ஆன தோழர்காந்தம் Bsc (Hons), MSc. அவர்களுக்கும், தோழர் சந்தரவடிவு M.A., L.t.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/641&oldid=787609" இலிருந்து மீள்விக்கப்பட்டது