பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 601 இத்தகைய திருத்தங்கள் சட்டத்தில் செய்யப்பட்ட வேண்டு மானால், திராவிட நாட்டு ஆட்சி திராவிடர் கைக்கு வரவேண்டும். எனவே, திராவிட நாடு தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் எனக் கோரப்படுவதின் முக்கிய நோக்கங்களில் இதுவும் ஒன்று என்பதை வாசர்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். கடைசியாக, காந்தம் - சுந்தரவடிவு திருமணமானது எதிர் காலத் திராவிடர்கள் ஒரு வர்க்கத்தினர் என்ற தளையின் கீழ்க் கொண்டு வருவதற்குப் பெரிதும் வழிகாட்டியாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இத்திருமணமானது நல்ல தகுதியும், நேர்மையும், ஒத்த கல்வியும் ஒருங்கே சேர்ந்த மணமக்கள் திருமணமாகும். தமிழ்ச் சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இவ்விதத் தகுதி பெற்று, இம்மாதிரி முறையிலேயே திருமணங்கள் நடந்தேறும் பேற்றைப் பெற்று வாழும் ஒரு நிலை ஏற்படுமனால் அதுவே திராவிடர்களின் உச்சநிலையாகும். எனவே பெற்றோர்கள் மற்றக் காரியங்களுக்காக வீணில் பணம் செலவு செய்வதைவிடத் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகப் பணம் செலவு செய்வதில் கவலை செலுத்தி, திராவிட சமூகத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். பிற்காலத்தில் எனக்கு, கல்வித் துறை பொதுக்கல்வி இயக்குநர் பதவி கிடைத்த போதும், சென்னைப் பல்கலைக்கழகத்துணைவேந்தர் பதவி இயைந்த போதும், மேற்கூறிய குடியரசு தலையங்கத்தை நினைவில் கொண்டேன். அதன் விருப்பப்படி எல்லா ஆனும் பெண்ணும் உயர்கல்வித் தகுதி பெற வழிவகை செய்வதற்காக என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டேன். புரட்சிக் கவிஞரின் வாழ்த்துப் பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தம் வாழ்த்துப் பாடலில் வைதிகத்தின் முதுகு எலும்பை ஒடிததுக் கைத்தடியாக வைத்துள்ள பெரியாரின் தொண்டின் விளைவே, காந்தம்-சுந்தர வடிவேலு திருமணம் என்று பாராட்டியிருந்தார். 'சாதி யில் பிறந்த மனிதனாகிய நான் சாதியற்ற மனிதனாகி விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/644&oldid=787612" இலிருந்து மீள்விக்கப்பட்டது