பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 605 சச்சிதானந்தரின் கண்டிப்பு ஆய்வாளரும் நானும் அவருடைய பணியைப் பங்கிட்டுக் கொள்ள உடன் சென்றோம். அது எங்கள் கடமையில் சேர்ந்தது, எனக்குச் சில பொறுப்புகளை, சில பாடங்களைத்தணிக்கை செய்யும்படிஒதுக்கினார்கள். நான் காலையில் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபோது மிடுக்கான ஆங்கிலேயரின் உடையில் சென்றேன். பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டிற்று. பள்ளித் திடல், தெருக்கள் எங்கும் பெருவெள்ளம். பகல் உணவிற்குப் போனபோது எப்படியோ சமாளித்தேன். பிற்பகல் மீண்டும் மழை கொட்டும் அறிகுறி தென்பட்டது. எனவே பூட்சையும் கால்சட்டையையும் கழற்றிவிட்டேன். வெண்மையான வேட்டி அணிந்து பள்ளிக்குத் திரும்பினேன். என்னைக் கண்ட சச்சிதானந்தர் கண்கள் சிவந்தன. 'வந்தால், முழு சூட்டில் வரவேண்டும். இல்லையோ, தார்பாச்சிக் கட்டிக்கொள்: அதோடு தலைப்பாகை அணிந்து கொள். இப்போது வந்துள்ள உடையில் பள்ளித் தணிக்கைக்கு வரவேண்டாம்' என்று உறுதியோடு உரைத்தார். என்செய்வேன்? திகைத்தேன். தலைமையாசிரியர் ஒற்றை மாட்டு வண்டியை அழைத்தார் அதில் ஏறி வீடு திரும்பினேன். உடையை மாற்றிக் கொண்டேன். பூட்சை கால்சட்டையை முழங்கால் அளவு மடித்துக்கொண்டு, நீரில் நடந்து, ஆசிரியர் அறைக்குச் சென்றேன்; ஆடையைத் திருத்திக் கொண்டேன். பூட்சை அணிந்து கொண்டேன். தணிக்கையைத் தொடர்ந்தேன். இரு நாள்கள் தணிக்கை செய்தோம். இறுதியில் நான் எழுதிக்கொடுத்த குறிப்புகளைக் கண்டு மாவட்டக் கல்வி அலுவலர் நிறைவு கொண்டார். நான் எதிர்த்து ஏதும் பேசாமல், கட்டளைக்குக் கீழ்ப் படிந்தது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. சச்சிதானந்தரின் பேச்சு அடுத்த நாள் காலை மீஞ்சூர் தொடக்கப்பள்ளி, ஆசிரிய மையத்தின் கூட்டத்தில் திரு. சச்சிதானந்தர் கலந்து கொண்டார். அவர் உரை நீண்டு இருந்தாலும் அருமையாகவும் இருந்தது. 'பெங்களுர் விரைவு வண்டி பறந்து ஒடுகிறது; தடம் புரளாமல் ஒடுகிறது. ஆண்டுக் கணக்காக ஆபத்தின்றி ஒடுகிறது. நாம் மகிழ்ச்சியோடு பயணம் செய்கிறோம். அது எப்படி முடிகிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/648&oldid=787616" இலிருந்து மீள்விக்கப்பட்டது