பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 23 ஏழைகளும் சுமையாக இராமல், நாட்டின் உணவு உற்பத்திற்குத் துணையாகி நின்றார்கள். இலட்சக்கணக்கான வீட்டுப் புறக்கடைகளிலும் பல இலட்சம் குடிசைகளிலும் காய்கறிகள் உற்பத்தியானதால் வறுமையின் நெருக்கடியையும் அன்னியன் சுரண்டலையும் அன்று ஒரளவு சமாளிக்க முடிந்தது. எந்தக் குடிசைமேல் காய்த்தாலும், பரங்கிக்காயும் சுரைக்காயும் பூசணிக்காயும் பலருக்கும் சொந்தம். குடிசைக்காரரே சமைத்துச் சாப்பிடமாட்டார். பங்காளிகளுக்குப் பங்கு போடுவதோடு நிற்கமாட்டார். வேண்டியவர்கள் பலருக்கும் முதல் காய்ப்பைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். 'வாழில் எல்லோரும் வாழ்வோம்' என்று அக்கால மக்கள் முழங்காவிட்டாலும், எல்லோரும் எல்லோருக்குமாக என்னும் அளவிற்கு உயராவிட்டாலும், ஊர்தோறும் பலரும் பலருக்காக' என்னும் பண்பின் முளை ஆண்டுதோறும் தலைநீட்டின. கிராமத் தன்னிறைவின் சிறப்பை மக்கள் மறந்துவிட்டது அவலமாகும். பெரும்பாடின்றி, ஐம்பது அறுபது இலட்சம் குடிசைகளிலும் வீடுகளிலுமாக, கூடைகூடையாகக் காய்க்க வைத்ததைக் கைநழுவ விட்டுவிட்டு, எல்லாவற்றிற்கும் சந்தைக்குச் செல்லும் போக்குப் புதிராகிவிட்டது, நல்லதல்ல. காந்தியடிகள், சிற்றுார் தன்னிறைவை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதை, அது வெறும் துறவியின் உளறல் என்று அலட்சியப் படுத்துதல் நல்லதல்ல. இரண்டு எருமைகளும் நான்கு முருங்கைகளும் உடையவனை எந்தப் பஞ்சமும் ஒன்றும் செய்யாது' என்பது பட்டறிவில் முளைத்த பொருள் நிறைந்த பழமொழியாகும். அக்காலத்தில் எங்கள் ஊரில் அநேகமாக எல்லா வீடுகளிலும் இலுப்பெண்ணெய் விளக்குகளே எரியும். இதுவும் உள்ளூரிலேயே கிடைத்தது. ஊரில் சில இலுப்பை மரங்கள் இருந்தன. பச்சை மரத்தை வெட்டினால் பாவம் என்பது அக்கால மக்களின் *கத்து பச்சை மரங்களைத் தோலுரிக்கும் வீரர்கள் அக்காலத்தில் மிகக் 3GSpa. ஆகவே மரங்கள் நெடுநாள் இருந்தன: நிழல் தந்தன. உரத்திற்கு உதவன: காய்த்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/65&oldid=787618" இலிருந்து மீள்விக்கப்பட்டது