பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு Յ 13 நான், கேள்வி கேட்க இடம் வைக்காமல் மடமடவென்று பேசினார். நான் ஆதிதிராவிடன்; எட்டாவது படித்து முடித்ததும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன், ஈராண்டு அக்கறையாகவே படித்தேன். என் பொல்லாத வேளை தேர்வில் ஒரு பகுதியில் தவறிவிட்டேன். 'அடுத்த தேர்வு எழுதுவதற்குப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, கண்ணிகைப்பேர் குடியிருப்பில் ஒரு தனியார் பள்ளி தொடங்கும்படி சிலர் ஆலோசனை கூறினார்கள். குடியிருப்புக்குள்சாதி இந்துக்கள் வரமாட்டார்கள். 'ஆகவே ஆதிதிராவிட ஆசிரியரே அங்குப் பள்ளிக்கூடம் நடத்த இயலும். தேர்வில் வெற்றிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர் எவரும் கிடைக்கவில்லை. 'எனவே, எனக்கு ஓராண்டிற்கு, விதிவிலக்கு அளித்து ஆசிரியர் நிர்வாகியாக இருந்து, தொடக்கப்பள்ளியை நடத்த உரிமம் கொடுத்தார்கள். 'அப்படியே பள்ளியைத் தொடங்கினேன். ஆண்டு முடிந்தபிறகு, ஊதியம் மான்யமாக வந்தது; ஆனால் தேர்வில் மீண்டும் தோல்வியடைந்தேன். 'கெஞ்சிக் கூத்தாடி, மற்றோர் ஆண்டு பணிபுரியச் சலுகை பெற்றேன். 'அவ்வாண்டு இறுதியில் தேர்வில் தோற்றேன். மூன்றாம் ஆண்டுச் சலுகைக்கு மனுப்போட்டேன். 'அதை எதிர்பார்த்துப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த எண்ணினேன். ஆனால், பள்ளிக் கட்டடம் இடிந்து வீழ்ந்து விட்டது. வாங்கின கடனை அடைக்க முடியவில்லை; அதனால் மேற்கொண்டு கடன் வாங்க முடியவில்லை; இத்தனை தொல்லைகளைச் சமாளிக்க முடியாமல், பள்ளியை நடத்தாமல் நிறுத்தி விட்டேன். 'ஆயினும் பள்ளி நடப்பது போல, மாதந்தோறும் கணக்கு அனுப்பிக் கொண்டு இருந்தது பித்தலாட்டமே. அய்யா பார்த்து ஏழை ஆதிதிராவிடனைக் காப்பாற்றுங்கள். 'இவ்வாண்டிற்கு அரசின் உதவி வேண்டாம் அய்யா. என்னை, மோசடி செய்தேன் என்று போலீசில் மட்டும் ஒப்படைத்து விடா தீர்கள்' என்று மன்றாடினார்; கெஞ்சினார். இரண்டொரு வினாடிகள் சிந்தனையில் ஆழ்ந்தேன். பளிச்சென்று என் அறிவில் தெளிவு ஏற்பட்டது. காவல்துறையிடம் ஒப்படைத்தால்: எப்போது எப்படி முடிவாகுமோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/656&oldid=787625" இலிருந்து மீள்விக்கப்பட்டது