பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/671

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 நினைவு அலைகள் எவரோ, சிலரோ, பலரோ பிழைப்பதற்கான வாய்ப்புகள் அல்ல பொதுத்துறை அலுவல்களும் பணிகளும். பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய சில பல தொண்டுகளைத் திறமையாகவும் காலத்தோடும் ஆற்றுவதற்கே அவை உள்ளன. எனவே, பொதுமக்கள் நலனே முன்னே நிற்க வேண்டும். பணியாளர் வளமும் வசதியும் முக்கியமல்ல. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செம்மையாகச் செயல்பட விரும்பும் எவரும் கற்றுக்கொள்ள வேண்டிய முதற் பாடம், கட்டுப்படுதல். ஆணைகளுக்குக் கட்டுப்படுதல், கசப்பான ஆனைகளுக்கும் கட்டுப்படுதல் என்பதாகும். கட்டுப்படக் கற்றுத் தேர்ந்தவனே, மற்றவர்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வழிநடத்த இயலும். என்னுடைய மாறுதல் ஆணையைப் பிறப்பித்தவருக்கு, அதற்கான உரிமை உண்டு. போதிய அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதும் ஒரளவு நீதி. 'சேரும் நாளை வெட்டியதும் கொடுமை. அதனால், அதற்குக் கீழ்ப்படியாதிருக்க எனக்கு உரிமை இல்லை என்பது என்னுடைய அப்போதைய முடிவு. என் பணிக்காலம் முழுவதும் அடுத்து அடுத்து அநீதிக்கு ஆளான போதும் இம்முடிவின் அடிப்படையே எனக்கு எதையும் தாங்கும் இதயந் தந்தது. அதைப் பெற்றிராவிட்டால், ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பேன்; செல்வாக்கைப் பயன்படுத்தியிருப்பேன்; சிலபோது வெற்றியும் பெற்றிருக்கலாம்; அவ்வெற்றிகள் எனக்கு வேண்டுமானால் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் பொது நன்மையைக் கெடுத்திருக்குமே! தியானத்தில் அமர்வோன், அனைத்தையும் மறந்து, ஒன்றே ஒன்றை மட்டுமே ஆழ்ந்து கவனத்துடன் சிந்திப்பதால்தான் சித்தனாகிறான். 94. தஞ்சைப் பயணம் அமிர்தலிங்கரை நம்பினேன் அரச ஊழியத்தில் இருப்பவன், எள்ளளவாவது பயன்பட விரும்பினால், 'பொதுநலன், மேலும் பொதுநலன், தீதில்லாப் பொதுநலன்' என்றே தியானித்துக் கொண்டிருக்க வேண்டும். சாதியானாகப் பிறந்த நான், தந்தை பெரியாரால் மனிதனாக உருவாக்கப்பட்டதன் விளைவு, மேற்கூறிய உலகியல் சேராத முடிவுகள்' என்றால் உண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/671&oldid=787642" இலிருந்து மீள்விக்கப்பட்டது