பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/674

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 631 சென்னையை அடைந்தேன். கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு, வெளியே வந்தேன். டிராம் வண்டிகள் ஓடின. அமில்டன் வாராவதி: வண்டியில் ஏறி வீடு போய்ச் சேர்ந்தேன். மாறுதல் செய்தியைக் கேட்டு வீட்டில் இருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். அதை மாற்றமுடியாது என்று நான் உரைக்கவும் வேதனைப்பட்டனர். பூவாளுர் பொன்னம்பலனார் அவ்வேளை, எனக்குக் கைகொடுக்க ஒருவர் அங்கு இருந்தார். அவர் யார்? பூவாளுர் அ. பொன்னம்பலனார் என்ற பெயரினர். நீண்ட சைவ மரபினைக் கொண்ட வோளளர் செட்டியார் வீட்டில் பிறந்தவர். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர். இளமைப் பருவத்தே தமிழை, அதிலும் சிறப்பாகச் சைவத் தமிழைக் கரைத்துக் குடித்தவர். இளமை தொடங்கும்போது, பூவாளுர் பொன்னம்பலனார், சைவப்பழமாக விளங்கினார். நெற்றியில் நீறும் கழுத்தில் உருத்திராட்சமும் அவரை விட்டு நீங்காச் சின்னங்கள். பொன்னம்பலனாரின் இளமைப்பருவம், இந்திய விடுதலை இயக்கத்திற்குப் பயன்பட்டது. தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி காங்கிரசு இயக்கத்தில் இருந்து அரும்பணியாற்றியபோது, பொன்னம்பலனார் பெரியாரின் அன்புக்குரிய தொண்டர். அவர் பொடி போடுதல், சிகரெட் புகைத்தல், வெற்றிலை பாக்குப் போடுதல் போன்ற எவ்வித வேண்டாத பழக்கமும் இல்லாதவர். அத்தகைய பொன்னம்பலனார் பெரியாரோடு காங்கிரசு இயக்கத்தில் இருந்து விலகிவிட்டார். தன்மான இயக்கத்திற்குத் தம்மை ஒப்படைத்து விட்டார். தன்மானஇயக்கத்தின்முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராகவிளங்கிய பொன்னம்பலனாருக்குப்போட்மெயில் என்று ஒருசிறப்புப்பெயர்உண்டு. பொன்னம்பலனாரின் உரைகள், உண்மையில் சொற்பொழிவுகளே. அவரைப் போன்று விரைவாகப் பேசக்கூடியவர் எவரும் தன்மான இயக்கத்தில் இல்லை. வளத்திலே பிறந்து, புலமையிலே உருவாகி, பேச்சிலே சிறந்து, எவர் கையையும் எதிர்பார்க்காமல் வாழும் நிலையில் இருந்த பொன்னம் பலனார் பழகுவதற்கு மிகவும் இனியவர். எவரையும் கண்டால், தாமே முன்வந்து அறிமுகப்படுத்திக் கொள்வார் கலகலப்பாக உரையாடுவார்; உதவி செய்ய முனைவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/674&oldid=787645" இலிருந்து மீள்விக்கப்பட்டது