பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/675

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 நினைவு அலைகள் பூவாளுர் பொன்னம்பலனாரே, சைவப்பழமாகவும் கதரையன்றி வேறொன்றும் அணியாத காங்கிரசுக்காரராகவும் விளங்கிய குத்துாசி குருசாமியாரைத் தன்மான இயக்கத்தவராக்கினவர். பின்னர் பெரியாருக்கு அறிமுகப்படுத்தியவர். அவரது குடிஅரசு வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்த்துவிட்டவர். என் சகலர் குருசாமியும் பொன்னம்பலனாரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஆகவே அவர் சென்னைக்கு வந்தால் குருசாமியார் மாமனார் வீட்டில்தான், மற்றும் சில தன்மான இயக்கத் தொண்டர்களைப்போல, தங்குவது வழக்கம். மாறுதல் செய்தியோடு நான் அவ்வீட்டிற்குச் சென்றபோது, பொன்னம்பலனார் அங்கு இருந்தார். அது எனக்கு மிகவும் உதவியாயிற்று. L. H. அத்தான் தஞ்சாவூருக்குத் தானே போட்டிருக்கிறார்கள். அது மிக நல்லது ஆயிற்று. அங்கே எனக்குப் பல நண்பர்கள் உண்டு. பள்ளித் துணை ஆய்வாளராக இருப்பவர் டி.எஸ். கல்யாணசுந்தரம்பிள்ளை என்பவர். 'அவரது தந்தையார் சோமசுந்தரம் பிள்ளை, மாகாண சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக இருந்தவர். உயர்ந்த பண்பும் நம்மவருக்குத் துணை நிற்கும் உணர்வும் கொண்டவர். 'திரு கல்யாணசுந்தரம் பிள்ளையிடம் வேலை பார்ப்பது உங்களுக்குப் பாதுகாப்பாகவே இருக்கும். 'இரவு வண்டிக்கு நானும் உங்களோடு வருகிறேன். உங்களைக் கொண்டுபோய்த் தஞ்சாவூரில் சேர்த்து, கல்யாணசுந்தரத்திடம் ஒப்படைத்து வேண்டிய உதவிகளைச் செய்யச் சொல்லுகிறேன். நானும் தஞ்சையில் இரண்டொரு நாள்கள் தங்கி, நீங்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பி வருகிறேன். மகிழ்ச்சியோடு புறப்பட ஏற்பாடு செய்யுங்கள்' என்றார். பொன்னம்பலனாரின் செயல்நேர்த்தி, புகழ்பெற்றது. அவர் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால், பொடிக் கூறுகளைக்கூட, கவனித்துச் செயல்படுவார். ஆகவே, என் வீட்டார் நிறைவோடு பொன்னம்பலனாரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். தஞ்சைப் பயணம் அங்கு நான் தங்கியிருந்த சில மணிகள் விரைந்து பறந்து விட்டன. பொன்னம்பலனாரும் நானும் எழும்பூர் சென்று இன்று இராமேசுவாம் விரைவு வண்டி' என்று அழைக்கப் |டும் அன்றைய போட்மெயிலில் புறப்பட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/675&oldid=787646" இலிருந்து மீள்விக்கப்பட்டது