பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 நினைவு அலைகள் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கைத் துணைவியார் வெளியே வந்து, எங்களை விசாரித்தார். நாங்கள் யார் என்று தெரிந்து கொண்டதும், தெருப்பக்க அறையைத் திறந்தார். அங்கே தங்கும்படி கூறினார். அம்மாள் உள்ளே சென்றபொழுது, 'அய்யாவை எழுப்பிவிடாதீர்கள். எங்களுக்கு ஒன்றும் அவசரம் இல்லை' என்று பொன்னம்பலனார் கூறினார். ஆய்வாளர் கல்யாண சுந்தரம் அரைமணி சென்றது. உயரமான மனிதர் ஒருவர் வீட்டிற்குள் இருந்து வந்தார். அறைக்குள் நுழைந்தார். கணிரென்ற குரலில் 'தம்பிதான் புதியவர் கூச்சப்பட்டு சும்மா இருந்தால், நீங்கள் ஏன் புதியவர் போல், இப்படிக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். வந்தவுடனேயே, கதவைத் தட்டி என்னை எழுப்புவதற்கு ஏன் தயங்கினர்கள்?' என்று உரிமையோடு பொன்னம்பலனாரைக் கடிந்து கொண்டார். ஆய்வாளர் என்னை வரவேற்றார். எனக்கு வேலை நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பதாக, அவராகவே கூறித் தெம்பு ஊட்டினார். பிறகு.? காலைக் கடன்களை முடித்தோம். குளித்தோம். ஆய்வாளர் கல்யாணசுந்தரத்தோடு சிற்றுண்டி உண்டோம். சில திங்கள் நான் மட்டும் தனியாக இருக்க வேண்டும் என்னும் சூழ்நிலையைப் பொன்னம்பலனார் எடுத்துக் கூறினார். நான் அப்படித் தங்க அறை ஒன்றை ஏற்பாடு செய்வதாக ஆய்வாளர் மிகுந்த அன்புடன் கூறினார். அலுவலக நேரம் நெருங்கியதும் ஆய்வாளர் என்னை அழைத்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே இரண்டாவது இளந்துணை ஆய்வாளராகச் சேர்ந்தேன். திரு. ஏ. டி.பி. சரவணசாமி என்னும் கிறுத்தவர், முதல் இளந்துணை ஆய்வாளராக இருந்தார். அவர் என்னிடம் அன்போடு பழகினார். ஆய்வாளர், அவ்வட்டத்தில் என் ஆய்வுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொடக்கப் பள்ளிகளைப் பற்றிப் பொதுவாக விளக்கினார். எப்பள்ளிகளில் எவற்றைப் பற்றி விழிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். 'நீங்கள் குருசாமியின் சகலர் என்பது இங்குப் பலருக்குத் தெரியும். உங்கள் வாயைக் கிளறி, ஆழம் பார்ப்பதற்கு முயல்வார்கள். ஒருவருக்கும் பிடி கொடுக்காதீர்கள்' என்றும் கூறினார். இரண்டு நாள்கள் ஆய்வாளரின் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். இதற்கிடையில் பொன்னம்பலனார் நான் தங்குவதற்கு இடத்தைத் தேடி அலைந்தார். ஆய்வாளர் ஆணைப்படி, சில ஆசிரியர்களும் அப்பொறுப்பை எடுத்துக்கொண்டு கேடினார்கள். விரைவில் வெற்றியும் கிட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/677&oldid=787648" இலிருந்து மீள்விக்கப்பட்டது