பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 நினைவு அலைகள் - காந்தி விரும்பிய இராம இராச்சியம் மாநிலம் தழுவிய மின்வளர்ச்சி என் நாற்பதாம் வயதில் தொடங்கிற்று. எனவே, சிறுவன் சுந்தரவடிவேலுக்கு எத்தகைய தெரு விளக்கும் இல்லாத நெய்யாடி வாக்கமும் பிற சிற்றுார்களுமே தெரியும். அக்கால நாட்டுப்புறம் பல்வகை இருளிலும் மூழ்கிக் கிடந்தது. பிற்காலத்தில் மிக நல்ல திசைகளில் மாற்றங் கண்டோம். காந்தியடிகள் விரும்பிய இராம இராச்சியங்கள், விடுதலையின் விளைவாகத் தோன்றின. மக்கள் ஆட்சிக்குப் புற அமைப்புகள் உருவாயின. உணர்வுகளும் மறுமலர்ச்சி பெற்று, மக்கள் அனைவருக்கும் தொண்டு செய்யும் தன்மை பெற்றால் நன்றாயிருக்கும். சிற்றுார் ஆட்சிகளில்கூட, ஆளின் தன்மையைப் பார்ப்பதைவிட, பணக்கட்டையும் ஜனக்கட்டையும் கவனிக்கும் போக்குத் தொடரும் வரை, ஊராட்சி மன்றங்களால் பெற வேண்டிய பொதுத் தொண்டுப் பயிற்சியும், பொது உணர்வுச் சமுதாயக் கண்ணோட்டமும் தழைக்கா. கல்வியின் தேவையை உணராத மக்கள் இப்போது என்னுடைய கதைக்குத் திரும்பட்டுமா? நான் சிறுவனாக இருந்தபொழுது நெய்யாடிவாக்கத்தில் தொடக்கப் பள்ளிக்கூடமும் கிடையாது. தன்னாட்சியின் கீழ் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கல்விக் கண்களைக் கொடுப்பதைத் தன்னுடைய கடமைகளில் ஒன்றாகக் கருதவில்லை, அன்றைய ஆங்கில ஆட்சி. 'நான்காவது வரையிலாவது, நாட்டில் உள்ளோர் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்' என்று கட்டளையிடும் மசோதா ஒன்றை, நாட்டுப் பற்றாளராகவும் கல்வியின் புரவலராகவும் விளங்கிய கோபாலகிருஷ்ணகோகலே என்ற அறிஞர், இந்தியச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அது சட்டமாக வில்லை. ஏன்? அன்னிய ஆட்சித்துறை எதிர்த்தது. இது இயலாது" என்றது. நான்காம் வகுப்புவரை பாடஞ் சொல்லிக் கொடுக்கவும் இசைய வில்லை. நாம் அன்னிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, கால் நூற்றாண்டு ஆனபோதிலும் ஆட்சிகளோடு கருத்து வேற்றுமை கொள்ளும் உரிமை சான்றோர்களுக்கே இல்லை. ஆங்கில ஆட்சியில் அரசை எதிர்த்து ஒட்டளிக்க யாருக்காவது முடியுமா? ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/68&oldid=787652" இலிருந்து மீள்விக்கப்பட்டது