பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/688

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 645 'எந்த ஊர்ப் பள்ளியில் வேலை செய்கிறீரென்று சொல்ல வில்லையே' என்று அவரை மடக்கினேன். 'மேலப்புனவாசல் குடியிருப்பில் உள்ள நலப்பள்ளியின் தலைமையாசிரியர் நான்' என்று பதில் கூறினார். 'அப்படியா? உங்கள் பள்ளியில் போதிய மாணாக்கர் வருகை இல்லை; அதனால் இரண்டாவது ஆசிரியர் தேவையில்லை. அப்பதவியை எடுத்துவிடலாமென்று உங்களுக்கு அறிவிப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்று குறுக்குக் கேள்வி கேட்டேன். 'வந்ததும் வராததுமாக அய்யா இதைக்கூடத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே!' என்று வியப்போடு கூறினார். 'அதுதான் என் வேலை. அது கிடக்கட்டும். இரண்டாவது ஆசிரியரும் தொடர்ந்து வேலை செய்கிற வகையில், வருகையை அதிகப்படுத்தக் கூடாதா?" இது, நான் விடுத்த அறைகூவல். "அதைப் பற்றிப் பேசலாம் என்றே துணிந்து வந்தேன். அய்யாவே அந்தப் பேச்சை எடுத்துவிட்டீர்கள். ' 'பெரியார் தொண்டர் ஒருவர் ஆய்வாளராக வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் ஒரு எண்ணம் உதித்தது. அய்யா கோபித்துக் கொள்ளாமல் இருந்தால் சொல்லுகிறேன்' என்று பணிவான குரலில் கூறினார். "சும்மா சொல்லும் என்றேன். 'என் பள்ளி தங்கள் தணிக்கைக்கு உட்பட்டது. தங்களையும் தங்கள் மேலதிகாரி, ஆய்வாளர் அய்யாவையும் எங்கள் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போய், பெற்றோர் கூட்டமும் பள்ளிக்கூட ஆண்டுவிழாவும் சேர்த்து நடத்தலாம்' என்று தோன்றிற்று. 'பெரிய ஆய்வாளரும் தங்கமானவர். நீங்கள் இருவரும் வந்து பேசினாலாவது எங்கள் மக்களுக்குக் கண் திறக்கக்கூடும்.' நான் வரவேண்டியது கடமை. பெரிய ஆய்வாளர் திரு டி.எஸ். கல்யாணசுந்தரம் (பிள்ளை) கூட உங்கள் முன்னேற்றத்தில் நாட்ட முள்ளவர். அதனால் அவரையும் எப்படியாவது அழைத்துக் கொண்டு போகலாம். நாங்கள் இருவர் வருவது மட்டும் போதும் ' என்று எனக்குத் தோன்றவில்லை. ஆதிதிராவிடர்களின் நண்பர்கள் 'அப்பக்கத்துப் பொதுமக்களுக்குப் பிடித்த பெரிய மனிதர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும். அவர்களுக்கு முக்கியப் பங்கு கொடுத்துப் பேசவைத்தல் நல்லது. அப்படிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/688&oldid=787668" இலிருந்து மீள்விக்கப்பட்டது