பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நினைவு அலைகள் பாட்டி மாகறலில் பிறந்தவர். எங்களுரில் வாழ்க்கைப்பட்டார்: பதினொரு குழந்தைகளைப் பெற்றார். ஒன்பது பேர் குழந்தைப் பருவத்திலும் சின்னஞ்சிறு வயதிலும் மறைந்தார்கள் இருவர் வளாநதாாகள. அவர்களில் ஒருவர் என் தந்தை. அவர் பெயர்துரைசாமி! அவருடைய அக்கா ஒருவர் திருமணமாகும்வரை இருந்தார். அவருக்குப் பால்யத்தில் திருமணம். ஆற்பாக்கத்தில் குடிபுகுந்தார். அங்கே அம்மை நோயில் மாண்டார். பதினொரு பேர்களில் கடைசியில் என் தந்தை மட்டுமே தப்பினார். 'பதினொன்று பெற்று, பத்தையும்துக்கிக் கொடுத்துவிட்டு ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு' என்று, உங்கள் அப்பாவை மட்டும் வைத்திருக்கிறேன்' என்று என் அருமைப் பாட்டியார் பல முறை என்னிடம் அங்கலாய்த்தது உண்டு. அந்த ஒன்றுகூடப் பேரனுக்கு நிலைக்காது, என்பதைப் பாட்டி, அப்போது கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். - என் தாயார் பெயர் சாரதாம்பாள். அவரோடு பிறந்தவர்கள் அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர், தங்கை ஒருவர். அந்த அண்ணன் சேலத்தில் உறவினர் வீட்டில் தங்கி, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, காலரா நோயால் திடீரென்று மாண்டார். அம்மாவிற்குத் திருமணம் ஆவதற்கு முன்பே, அவருடைய அருமைத் தந்தையாரும் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு, பாட்டி பாக்கியத்தம்மாளின் மேல் வீழ்ந்தது. அவர்கள் திறமைசாலி: ஊரில் மற்றவர்களைவிட அதிக நிலமுடையவர். பயிரையும் சமாளித்துக்கொண்டு குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய நிலை. நிலம், ஊரில் மட்டுமல்ல, ஆறு கிலோ மீட்டர் துரத்திலுள்ள மாகறலிலும் இருந்தது. மூத்த மகளுக்கு மாப்பிள்ளை தேடினார். நற்குணம், நல்லொழுக்கம், அதே நேரத்தில் திறமை, சுறுசுறுப்பு இத்தனையுமுடைய என்தந்தைக்கு மணஞ் செய்து வைத்தார். என் தந்தை வழிப் பாட்டனாரைவிடத் தாய் வழிப் பாட்டனாருக்குச் சொத்து அதிகம். தாய் வழிப் பாட்டனார் கோவிந்தர். சொத்தைப் பராமரிக்க வயது வந்த ஆண்பிள்ளை தேவைப்பட்டது. எனவே, என் தந்தை, மாமியார் வீட்டிற்குக் குடி வந்து விட்டார். அவ்வீட்டுப் பயிரையும் குடும்பத்தையும் வளர்க்கும் பெரிய பொறுப்பை மேற்கொண்டு உழைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/70&oldid=787693" இலிருந்து மீள்விக்கப்பட்டது