பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 657 'ம்ாவட்ட ஆட்சிக்குழு ஏற்பட்டபோது, சத்திரப் பராமரிப்பு அக்குழு விடம் வந்தது. ஏ. டி. பன்னிர்செல்வம் அக்குழுவின் தலைவரானபோது. நெடும்பலம் என்.ஆர். சாமியப்பா போன்றவர் களின் ஆதரவோடு, சத்திரச் சாப்பாட்டை நிறுத்தாமல் படிக்கும் பிள்ளைகளுக்குச் சோறு போடவும் ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்தார். 'சில ஊர்ச் சத்திரங்களில் இப்படிச் செய்த பிறகும் வருவாய் மிஞ்சிற்று. அதைக் கொண்டு தஞ்சையில் ஆதிதிராவிடர்களுக்கென்ற தனியாக விடுதியே அமைத்துவிட்டார். 'பன்னிர்செல்வம் மடை மாற்றியதால், எத்தனையோ ஆதிதிராவிட ஏழைப் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பெற வாய்ப்பு ஏற்பட்டது. 'பெரிய சாதிக்காரர்கள் மட்டும் சாப்பிட்டதுபோய், எங்களுக்கும் கிடைக்கச் செய்தபோது, எவ்வளவு துாற்றல், எதிர்ப்பு, அம்மம்மா! அவற்றைப் பொருட்படுத்தாத அந்த இரும்பு மனிதர்களால் எங்களுக்குக் கண்திறந்து இருக்கிறது' என்று உணர்ச்சி வயப்பட்டுக் கூறினார்கள். நன்றி மறவாத ஜமாலி அதை நினைந்து எழுதும்போது, இன்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இசுலாமியத் தம்பி ஒருவர். உளமுருகிச் சொன்னது நினைவிற்கு வருகிறது. அவர் சொன்னது என்ன? 'நான் திருவையாறு மன்னர் கல்லூரியில் படித்துத் தமிழில் வித்துவான் நிலை அடைந்தேன். 'அக்கல்லூரியில், நெடுநாள் வடமொழி வகுப்புகள் மட்டுமே நடந்தன. பின்னர், பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மாவட்ட ஆட்சிக்குழு தமிழ் வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்தது. "திருவையாறு தமிழ்க் கல்லூரியில் தமிழ் படிக்கச் சேர்ந்த முதல் முஸ்லீம் நானே. அதற்கு முன் அக்கல்லூரியில் முஸ்லீம்களைச் சேர்ப்பதே இல்லை. பெரியாரின் அதிர்ச்சி மருத்துவம் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. நான் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். நான் பெற்றுள்ள தமிழ்ப் புலமை அங்கே பெற்ற புதையல்' இப்படிச் சொன்ன இளைஞர் - முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் - இலப்பைக் குடிக்காடு ஜமாலி என்ற பெயரினர்; நல்ல பேச்சாளர்; நல்ல பண்பாளர்; இனிய நண்பர். இவர், ஒர் அய்ந்தாண்டு காலம் சென்னைச்சட்டமன்ற உறுப்பினராக இருந்ததாக நினைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/700&oldid=787695" இலிருந்து மீள்விக்கப்பட்டது