பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு ᏮᏮ1 தாங்கள் தனி அக்கறை கொண்டிருந்தவற்றில் மட்டும் குறுக்கிட்டுக் குறிப்பு எழுதுவார்கள். மற்றவற்றில், கொக்கி போடுவார்கள். என் விளக்கமும் அப்படியே முடிவு செய்யப்பட்டது முடிவு ஆனை என்ன சொல்லிற்று? 'விளக்கம் சரியில்லை. ஆனாலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இம்முறை விட்டு விடுகிறோம். எப்படி இருக்கிறது கெட்டிக்காரத்தனம்? 100. தனிக்குடித்தனம் புண்பட்டேன் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவதாக வந்த மேலாணை எனக்கு மகிழ்ச்சி ஊட்டவில்லை. மாறாக என் மனத்தைப் பெரிதும் புண்படுத்தியது. ஏன்? நான் தவறு ஏதும் செய்யவில்லை என்பதால். 'வேலையின் அளவோ, தரமோ கவனிக்கப்படுவதில்லை. பதவிகளில் இருப்பவர்களுக்கு வேண்டியவர்களாகி விடும் கலை தெரிந்தால் போதும், என்று நண்பர்கள் சிலர் எனக்குக் கருத்துரை வழங்கினார்கள். அவர்கள் எனக்கு ஆறுதல் கூற முயன்றார்களா? அல்லது எத்திப் பிழைக்கும் வழிகாட்ட முயன்றார்களா? எனக்கு நேர் மேலதிகாரியாகிய திரு. டி.எஸ். கல்யாண சுந்தரம் எனக்கு நன்மருந்தாக இருந்தார். 'தம்பி! இதற்கெல்லாம் வருத்தப்படாதீர்கள். உங்களுக்குக் கல்வித் தகுதி அதிகம்; உழைப்பதற்கு அஞ்சமாட்டீர்கள்; வேலைத் திறனும் நிறைய. அப்படிப்பட்டவர்களைக் கண்டால், பொறாமை எழுவது இயற்கை. அதுவே, அவர்களைத் தொல்லை கொடுக்கத் துண்டும். 'இவற்றிற்கு மேலாக, கல்வித் துறை அலுவலகங்களின் சூத்திரதாரிகளாக இயங்கும் எவரையும் நீங்கள் போய்ச் சரிக்கட்டிக் கொள்ளவில்லை. பொறாமையும் எரிச்சலும் சேர்ந்து, அநீதியான ஆணையை அனுப்பியுள்ளன. அதைப் பொருட்படுத்த வேண்டாம்' என்று திரு. டி.எஸ். கல்யாணசுந்தரம் கூறியது மனத்துக்கு இதமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/704&oldid=787701" இலிருந்து மீள்விக்கப்பட்டது