பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 நினைவு அலைகள் அம்மணமக்கள் வாழ்வாங்கு வாழ்வதைப் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டு மகிழ்கிறேன். தனிக் குடித்தனம் கும்பகோணத்தில் என்னுடைய தேர்வு மேற்பார்வை, சிக்கல் ஏதுமின்றிச் செம்மையாக நடந்து முடிந்தது. மனநிறைவோடு தஞ்சைக்குத் திரும்பிய எனக்கு மகிழ்வூட்டும் செய்தி காத்திருந்தது. அது என்ன? என் மனைவி காந்தம்மா எல். டி. தேர்வுகளை எழுதி முடித்து விட்டார். தஞ்சைக்கு வர ஆயத்தமாயிருக்கிறார்; குடித்தனத்திற்கு வீடு பார்த்துத் தகவல் கொடுத்தால், உடனே புறப்பட இயலும் என்பது செய்தி. வீடு பார்க்கும் பணியில இறங்கினேன். இன்றைக்கிருக்குமளவு, வீட்டுப் பஞ்சம் அன்று இல்லை; எனினும் வீடு எளிதாகக் கிடைப்பதும் அரிது. நண்பர்கள் உதவியால் இரண்டொரு நாள்களில் தஞ்சை கணபதி நகர்ப்பகுதியில் தனி வீடு கிடைத்தது. மாவட்டப் பதிவாளராக இருந்த திரு. சுப்பிரமணிய பிள்ளை என்பவரின் பங்களாவின் வளைவிற்குள் தனியாக இருந்த மாடி வீடு கிடைத்தது. இத் தகவலை மவிைக்கு எழுதினேன். உடனே, முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு, என் மனைவியும் மாமியாரும் தஞ்சை வந்தடைந் தாாகள. மாமியார் சில வாரங்கள் எங்களோடு தங்கியிருந்து உதவினார். உள்ளுரில் உதவி உண்டா? உண்டு. நான் நிக்கல்சன் வங்கி மாடியிலிருக்கும்போதே, திரு. பால கிருஷ்ணன் என்பவர், வலிய வந்து என்னைக் கண்டார்; என் நண்பரானார். அவ்வப்போது மாலை நேரங்களில் என் அறைக்கு வந்து அன்போடு உரையாடிவிட்டுச் செல்வார். சிலவேளை, அவரோடு இரத்தினசாமி என்பவரும் வருவார். இவர்கள் இருவரும் அப்போது காவல்துறையின் கீழ்ப்படிக்கட்டில் இருந்தவர்கள். அவர்கள் யாரோ? நான் யாரோ? முன் பழக்கம் உண்டா? கிடையாது. இருப்பினும், எங்களைப் பிணைத்து வைத்தது எது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/705&oldid=787702" இலிருந்து மீள்விக்கப்பட்டது