பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 665 'உணர்ச்சி ஒருமை, உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்று வள்ளுவர் கூறினார் அல்லவா? அதற்கு எடுத்துக்காட்டு எங்கள் நட்பு ஆகும். அவ்விருவரும் தன்மான இயக்க உணர்வு உடையவர்கள். அவ்வுணர்வு பற்றிப் பல்வேறு தவறான கருத்துகள், அறிஞர் களிடையேயும் உலவுகிறது. எனவே தொடக்க காலம் முதல், தன்மான உணர்வுடையவனாக வாழ்ந்த நான் அவ்வுணர்வு எது என்று விளக்கக் கடமைப்பட்டிருக் கிறேன். 'எல்லோரும் ஒர் குலம்; எல்லோரும் சமம் இதுவே தன்மான இயக்கக் கொள்கையாகும். அத்தகைய உணர்வைப் பொதுமக்கள் மூச்சாக்கும் பணியே, தன்மான இயக்கப் பணியாகும். ஆதி திராவிடராகிய இரத் தினசாமி யும் யாதவராகிய பால கிருஷ்ணனும் சமத்துவ நிலைக்குத் துடிப்பது இயற்கை. அந்நிலைக்குத் தன்னை ஒப்படைத்து விட்ட ஒருவனிடம் அவர்கள் பாசம் கொள்வதும் இயற்கை. அவ்வகையில் எழுந்தது எங்களுடைய நேசம், அது வாழ்நாள் நேசம். மழைக்காலக் காளான் அல்ல. என் மனைவி தஞ்சைக்கு வந்து குடித்தனம் கட்டியபோது இதுவும் அதுவும் தேடி வாங்கிவர, மேற்கூறிய இரு தோழர்களும் பெரிதும் உதவினார்கள். திருமதி. பாலகிருஷ்ணனும் இரண்டொரு முறை வந்து என் மனைவியோடு பேசி, வழிகாட்டினார். தனி வீட்டில் குடிபுகுந்த பின்னரும் பாலகிருஷ்ணனும் இரத்தின சாமியும் எங்களை வந்து பார்த்து அன்புடன் பேசிவிட்டுப் போவார்கள். எங்கள் பேச்சு விலைவாசி பற்றியா? இல்லை. எங்கே நிலம், மனை, வாங்கிப் போடலாம் என்பது பற்றியா? இல்லை. எந்தப் பள்ளியில் எவரைச் சேர்க்க வேண்டுமென்பது பற்றியா? இல்லை. எவர் எவ்வளவு கையூட்டுப் பெறுகிறார் என்பது பற்றியா? அதுவுமில்லை. பின் என்ன? காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட முறைகள்: பொதுமக்களின் கல்விக் குரல்வளையைப் பிடித்து நசுக்குவது போல் ஆறாம் வகுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/706&oldid=787703" இலிருந்து மீள்விக்கப்பட்டது