பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 29 என் பிறப்பும் ஆரம்பப் படிப்பும் நான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு அக்டோபர் 12, புரட்டாசித் திங்கள், கடைசி சனிக்கிழமை மாலைப் பொழுது, சுவாதித் திருநாளில் சுகமாகப் பிறந்தேன். தாயாருக்கு ஆபத்து விளைவிக்காமலேயே பிறந்து விட்டேன். எனக்குப் பின் தம்பிகள் நால்வர் பிறந்தனர். கடைசித் தம்பி முருகேசன் பிறந்ததுமுதல் மெலிந்திருந்து, நான்காவது வயதில் மறைந்தான். == எங்களோடு பெண் ஒன்றும் பிறக்காதது எனக்குக் குறை. என் தாய்மாமன் சுந்தரசேகரர் காஞ்சிபுரத்தில் உயர்நிலைப் பள்ளிக்குப் படிக்கச் சென்றார். இந்நூற்றாண்டின் முப்பதுகள்வரை, சரளைக்கல் போட்ட பாட்டை ஏதும் எங்கள் ஊருக்கு வராது. கப்பிகூடப் போடாத நாட்டு வண்டிப் பாதையில்தான், எத்திசைச் சென்றாலும் பயணம். எங்கள் மாமாவின் படிப்பிற்காக, கிராமத்தை விட்டுக் காஞ்சிபுரத்தில் குடித்தனம் கட்ட நேரிட்டது. என் சிறிய தாயார், திருபுவனத்து அம்மாள்- அவருக்கு அப்பொழுது பதினொரு, பன்னிரண்டு வயது - காஞ்சிபுரத்தில் இருந்து குடித்தனம் கட்டி, சமைத்துப் போட்டு, என் மாமா படிப்பதற்கு உதவினார். மாமாவைப் போலவே, என் சிறிய பாட்டனார் பிள்ளைகள் மூவரும் காஞ்சியில் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு வந்தார்கள். அவர்கள் மூத்த சகோதரிகள், அவர்களுக்காக அடுத்தடுத்துக் காஞ்சிபுரத்தில் குடித்தனம் வைத்தார்கள். 3. ஐந்து வயதில் கல்வி எனக்கு ஐந்து வயது நிரம்பியதும் எழுத்தறிவிக்கத் தொடங்கி னார்கள். தொடக்க விழா ஆடம்பரமாக இருந்தது. விழாவிற்காக, எனக்கு முழு வெல்வெட் கால்சட்டையும், வெல்வெட் மூடு கோட்டும் தைத்தார்கள். சென்னைக்குச் சென்று தைத்து வந்தார்கள். விழாவன்று மேற்கே உள்ள சிவன் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். சாமி கும் பிட்ட பிறகு, வெல்வெட்டு உறைக்குள் என்னை புகுத்தி விட்டார்கள். அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். நாதசுர இசையும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/71&oldid=787707" இலிருந்து மீள்விக்கப்பட்டது