பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு E69 'அதனால், தாங்கள் விரும்பும் உணவை மாமியார் பாடுபட்டு சமைத்த போதிலும் தங்களுக்கு மட்டும் இவ்வேளை, கஞ்சி கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டேன்; தயவு செய்து மன்னிக்கணும் அய்யா' என்றேன். அருகில் இருந்த பொன்னம்பலனார், சமைத்த கறியை அப்படியே வைத்து இருந்து, காலையில் போகும்போது, உணவு எடுப்பில் கொடுத்தனுப்புங்கள். நாளைப் பகல் உணவுக்காவது அய்யாவுக்குப் பயன்படட்டும்' என்றார். பெரியார், வேறு என்ன செய்ய முடியும்? அவர் எப்போதும் மருத்துவர் கட்டளையை மதிப்பவர்; அதன்படி நடப்பவர். எனவே, பொறுத்துக் கொண்டார். விருந்துக்கு அழைத்துவிட்டு, பட்டினி போட்ட என்மேல் எரிச்சல் படவில்லை. - பெரியார், கஞ்சியைக் குடித்தார். பொன்னம்பலனாரும் உள்ளூர் நண்பர்களும் பெரியாருக்கு சமைத்த தனி உணவைச் சுவைத்து உண்டார்கள். எஸ். வி. லிங்கம், குத்துாசி குருசாமியாரைப் போல, என்னைப் போல, உணவுப் பழக்கத்தில் பழைய குடும்ப மரபை விடாமல் பின்பற்றினார். மரக்கறி உணவை உண்டார். பிறகு.? தந்தை பெரியாரோடு பேசிக்கொண்டிருந்தோம். உடல்நலம் பற்றி, பொதுக்கூட்டம் பற்றி, சில மணித்துளிகளே பேசினோம். அப்புறம்? என் இயல்பு என் அன்றைய நிலைக்கு மீறிய பேச்சில் ஈடுபட்டேன். உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வோர் இயல்பு உண்டு. என் இயல்பு என்ன? பெரியவர்களிடம், வள்ளுவர் நெறியைப் பின்பற்றுவேன். 'அகலாது, அணுகாது, தீய்க்காய்வார் போல்க" என்ற கட்டளையை நோன்பாகவே மேற்கொள்வது என் இயல்பு. என் தந்தையிடமும் அந்நெறியையே பின்பற்றிய நான், பெரியார் உரையாடும்போது, உடன் இருந்தாலும் கேட்டுக்கொண்டு இருப் பேனே ஒழியக் குறுக்கிட மாட்டேன். என் இயல்பிற்கு மறுபக்கம் ஒன்று உண்டு. நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல், என்னிடமும் இரு இயல்புகள் இருந்து வருகின்றன. வாய் திறந்தால், வாய்மையே வெளிவரும். எவரோடு பேசுகிறோம் என்பதையே மறந்து, உண்மையைப் பிறந்த மேனியில் வெளிப் படுத்துவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/710&oldid=787708" இலிருந்து மீள்விக்கப்பட்டது