பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 67.1 'வகுப்பு உரிமைக்கும் நேர்மையான ஆட்சிக்கும் போராடும் நீதிக்கட்சிக்குத் தலைவராகத் தகுதி உடையவர்கள், சிலராவது இருப்பார்கள். 'தாங்கள் தொடங்கி நடத்தி வரும், சமுதாய, பொருளியல் புரட்சிக்குத் தலைமை தாங்க, தாங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். 'தங்களை நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால், புரட்சிக் கப்பலை கீழே அறுத்துவிட்டார்களோ, என்று அய்யப்படுகிறேன். 'வகுப்புரிமை உடனடித் தேவை. எவ்வளவு துல்லியமாக வகுப்புரிமை வழங்கினாலும் அது முழுமையான பரிகாரம் ஆகாது. சமதர்மம் நடைமுறையாகும்போதே எல்லோர்க்கும சமவாழ்வு கிட்டும். அதை வெற்றிகரமாக உணர்த்திக்கொண்டு வந்த தாங்கள், நீதிக்கட்சிக்குக் கவனத்தை மடைமாற்றி விட்டதால், சமதர்மப் பணிக்கும் சாதிக் கலைப்புப் பணிக்கும் இடையூறு ஏற்படாதாஅய்யா? 'மற்றவர் அண்ட அஞ்சும் புரட்சிகரமான பொறுப்பையும் தலைமையையும் இழக்கலாமா அய்யா? 'நீதிக்கட்சித் தலைமை, தன்மான இயக்கத் தலைமைக்கு ஈடாகத் தோன்றவில்லை" என்று, பொதுத்தொண்டில் புடம் போடப்பட்ட, அறுபத்திரண்டு வயது பெரியாரிடம், இருபத்தொன்பது வயதும் நிரம்பாத, இளைஞனாகிய நான் தைரியமாக உளறினேன். என் கருத்தைப் பெரியார் ஏற்றார் நான் கட்சிக்காரன் அல்ல; கொள்கைக்காரன். இதைப் பெரியார்

  • 5 Gi,7/TGLI"MTTT.

'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' இக்குறள் நெறியைப் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சென்று படிக்காத மக்களின் காதுகளிலும் முழங்கியவர் பெரியார். அவர் சொல்லியவண்ணம் செய்து வருபவர். எனவே, கல்வித்துறையில் இளந்துணைப் பள்ளி ஆய்வாளர் என்னும் கடைசிப் படிக்கட்டில் நின்ற நான் உளறியதைக் கேட்டு எரிச்சல் கொள்ளவில்லை. அரசியல் பற்றி நீங்கள் பேச வேண்டாம் என்று மட்டந்தட்ட வில்லை. மாறாக, தன்னிலை விளக்கத்திற்கு அருமையான வாய்ப்பாக, அதைப் பயன்படுத்தினார். "ஆமாங்க! அய்யா சொல்வதில் உண்மை இருக்குதுங்க. 'அரசியல் கட்சி நடத்துவதைவிடத் தொல்லையானது சமுதாய, பொருளியல் மாற்றத்திற்கு இயக்கத்தை நடத்துவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/712&oldid=787710" இலிருந்து மீள்விக்கப்பட்டது