பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ74 நினைவு அலைகள் பண்டங்கள் விலை மலிவு வீட்டு நுகர்பொருள்களின் விலை எப்படி? ரூபாய்க்கு நான்கு படி அரிசி கிடைத்தது. மட்ட அரிசி, அய்ந்தாறு படியும் கிடைக்கும். வீட்டெதிரில் கறந்த பால் படி ஆறு அனா முதல் எட்டனா வரை; வீசை நெய் மூன்று ரூபாய்கள். அதில் கலப்படம் இராது. நல்லெண்ணெய் விலை அதற்கும் குறைவு. பருப்பு வகைகள் மலிவாகக் கிடைத்தன. ஒரனாவிற்கு இக்கால ஆறு காசுக்கு - அன்று தஞ்சையில் பத்து முந்திரிப் பருப்புகள் கிடைக்கும். எந்தக் காய்கறி விலையும் அச்சுறுத்தாது. மூன்று காசுக்கு மூன்று முள்ளங்கி. இன்றோ அறுபது காசு. ஒன்றரைக் காசுக்கு ஒரு முருங்கைக்காய். நாலு காசுக்குக் கீரை வாங்கினால் நல்ல சாப்பாட்டுக்காரர் நால்வருக்குப் போதும். இளநீர் விலை என்ன தெரியுமா? ஒரனா. இன்mைப கணக்கில் ஆறுகாசு. ஒட்டல் பண்டங்கள் விலை எப்படி? இரண்டு இட்லிகள், அதை மூழ்கடிக்கும் அளவில் சாம்பாரோடு அரையனா - அதாவது இப்போதைய மூன்று காசுகள். காப்பி கோப்பை ஆறு காசுகள். வண்டிச்சத்தம் எப்படி? இரயில் பயணக் கட்டணத்தைக் காட்டுகிறேன். விரைவு வண்டியில், முதல் வகுப்புக் கட்டணம் மைலுக்கு ஒரனா. அதாவது, சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணக்கட்டணம் பத்தொன்பது ரூபாய். சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துக்கட்டணம், நெடுங்காலம் எழுபத்தைந்து காசுகளாக, இருந்தது. பிறகு சில ஆண்டுகள் ஒரு ரூபாய் அளவே இருந்தது. எளிய மக்களின் தின்பண்டம் அரிசிப் பொரி; அதன் விலை? படி அரையனா (அதாவது, மூன்று காசுகள்) அதுவே மழைக்காலத்தில் ஒர் அணா ஆறு காசுகள். அஞ்சல் அட்டை அரையனா; அதாவது மூன்று காசுகள். அஞ்சல் உறை ஒர் அனா. அதவாது ஆறு காசுகள். அவை அதிக விலை என்று விடுதலைப் போராட்ட வீரர்கள் மேடைதோறும் குற்றம் சாட்டினார்கள். வெள்ளைக்கார ஆட்சி போனால், அனாவிற்கு (ஆறு காசிற்கு) நான்கு அஞ்சல் அட்டைகளும் இரண்டு அஞ்சல் உறைகளும் விற்கச் செய்வோமென்றார்கள். அலுவலர்களின் சம்பளம் திங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/715&oldid=787713" இலிருந்து மீள்விக்கப்பட்டது