பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ0 நினைவு அலைகள் எங்கள் தெருவில், பெருமாள் கோயில் முன்புள்ள திறந்த வெளியில் கொட்டகை போட்டிருந்தார்கள். அழைக்கப்பட்ட உறவினர்களும் அன்பர்களும் கண்காணிக்க அரிநமோத்து சித்தம் என்று சொல்லி, மணல்மேல் 'அ' என்ற எழுத்தை எழுத வைததாாகள. என் விரலைப் பிடித்து எழுத இயக்கிய குருநாதரின் பெயர் இப்போது எனக்கு நினைவில் இல்லை. காஞ்சிபுரம் ஞானப்பிரகாசமடத்திற்கு நாங்கள் சீடர்கள். இந்த மடம் மிகத் தொன்மையான மடம். ஆதிகாலம் முதல், இதன் சீடர்கள் யாழ்ப்பாணத்திலும் இருந்து வந்தனர். எங்கள் உறவினர்கள் வீடுகளில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளின் போது, மடத்திற்குக் குறிப்பிட்ட தொகையைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். செலுத்தும் முறை தவறிப்போய்ப் பல்லாண்டுகளாகி விட்டன. ஆனால், நான் எழுதப் பழகிய காலத்தில், இந்த நடைமுறை இருந்தது. குரு ஆணைப்படி, மடத்திலுள்ள சீடர் ஒருவர் வந்திருந்து வாழ்த்தினார். ஏறத்தாழ ஈராண்டுகள் உள்ளூரிலேயே இருந்து எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். எங்களுக்கு எதிர்க்கரையிலுள்ள இளையனார் வேலூரிலிருந்து கதிர்வேல் வாத்தியார் வந்து, திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திவந்தார். ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஒடும் நாள்களில் அவரது வருகை தடைப்பட்டு விடும். தாத்தாவின் அன்பும் ஆசிரியரின் திகைப்பும் என் உறவினர்கள் ஆண்கள் அனைவரும் நாள்தோறும் கழனியைச் சுற்றிப் பார்த்து வருவார்கள். பயிர் வேலையைப் பார்த்துவிட்டு, பகல் உணவுக்குமுன் குளிப்பார்கள். என் வயது உறவினர்கள், மூன்று நான்கு பேர்கள் என்னுடன் சேர்ந்து படித்து வந்தார்கள். வீடுகளில் பிள்ளையார் பூசை செய்துவிட்டு உண்பார்கள். எல்லா வீடுகளிலும் வீட்டுப் பொறுப்பு பெண்ணரசிகளுடையது. அவர்கள் வீட்டு வேலைகளுக்குச் சுணங்கமாட்டார்கள். என் தந்தை வழிப் பாட்டனார், தம் நிலத்தை மட்டும் சுற்றிப் பார்ப்பதோடு நிற்கமாட்டார். மற்றவர்கள் நிலத்தையும் சுற்றிவிட்டே வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/72&oldid=787718" இலிருந்து மீள்விக்கப்பட்டது