பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 நினைவு அலைகள் பண்டிதை கிருஷ்ணவேணியின் நெருங்கிய உறவினராகிய பத்ம லோசினி என் மனைவிக்குப் பள்ளிப்பருவம் முதல் நெருக்கமானவர். 'பத்மலோசினியுடனேயே ஆசிரியைப் பயிற்சி பெற்றேன். அவரோடு ஒரே உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியப் போகிறேன்' என்று என் மனைவி காந்தம்மாள் மகிழ்ந்தார். என்நிலை என்ன? சாரதாவித்யாலயத்தில் என் மனைவிக்க வேலை கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சி. அதே வேளை ஏக்கம் ஏன்? 'என் மனைவி சென்னைக்குப் போய்விட்டால், எனக்கு அந்நகருக்கு மாறுதல் கிடைக்குமா? எவ்வளவு காலம் பொறுத்துக் கிடைக்கும்?" இப்படிக் கவலைப்பட்டேன். இதைப்பற்றி முன்னரே, அண்ணன் குத்துாசி குருசாமி யாரோடு கலந்து பேசி உள்ளோம். காந்தம்மாவுக்குச் சென்னையில் வேலை கிடைத்தால் தயங்காது, அந்த வேலையை ஒப்புக் கொள்வது' என்ற முடிவுக்கு வந்திருந்தோம். முன்னரே முடிவுசெய்து இருப்பதாலேயே, மனைவியைப் பிரிந்து தனித்து வாழ்தல் இன்பமாகிவிடுமா?. வேறு வழியின்றி, என் மனைவி சென்னைக்குச் சென்றார். சாரதா வித்யாலயத்தில் ஆசிரியைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். நான் மீண்டும் வாடகை அறைக்குக் குடிபெயர்ந்தேன். அலுவலக வேலையை ஆழமாகக் கற்றேன் கல்வித்துறையின் கடைசித் தொண்டனாக நான் இருந்தபோது, பெற்ற பட்டறிவு எனக்குப் பெரிதும் உதவிற்று. எத்துறையில் வேலை செய்தாலும் அத்துறையின் கீழ்மட்ட வேலைகளில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டால், மேல் பதவிகளுக்கு உயர நேரும்போது, பெரிய பொறுப்புகளை எளிதில் சமாளிக்கலாம். இந்தத் தெளிவு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்படவில்லை. ஆனால் வேலையில், மேல் இழ் என்று பாராமல், மனம் ஒன்றிச் செம்மையாகச் செய்யும் என் இயல்பு, எனக்குக் கை கொடுத்தது. தஞ்சையில் இருந்தபோது, இருவகையான, நுட்பமான நச்சு வேலைகளை நான் கற்றுக்கொள்ள முடிந்தது. ஒன்று, தனியார் தொடக்கப்பள்ளிகளுக்கு ஒராண்டிற்கான மான்யத் தொகைகளை முடிவு செய்தல்; சரிபார்த்தல். அதன் பட்டியல்களில் தணிக்கை பார்க்க வேண்டிய தகவல்களோ பல. அக்காலத்தில் கணக்கீட்டைக் கூடியவரையில் சிக்கலாக்கி வைத்திருந்தார்கள். மாவட்டக் கல்வி அலவலகத்தில் அமர்ந்து, நூற்றுக்கணக்கான பள்ளிகளின் விவரங்களைத் தணிக்கை பார்த்தலில் தேர்ச்சி பெற்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/723&oldid=787722" இலிருந்து மீள்விக்கப்பட்டது