பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 நினைவு அலைகள் 'தற்குறிகள் நிறைந்த எந்தச் சமுதாயம் முன்னேறியுள்ளது? எந்த நாடு முன்னேறியுள்ளது? 'அறிவிலும் வளத்திலும் முன்னே நிற்கும் நாடுகள், அநேகமாக எல்லோருக்கும் எழுத்தறிவு பரவியுள்ள நாடுகளாகவே இருக்கக் காண்கிறோம். --- 'படித்த சுயமரியாதைக்காரர்கள், படிக்காத சுயமரியாதைக்காரருக்கு எழுத்தறிவு ஊட்டக் கங்கணம் கட்டிக்கொள்ளுங்கள்' இது என் சாக்கோட்டைப் பேச்சின் சாரம் ஆகும். 105. முதியோர் கல்வி தற்குறித்தன்மை மக்கள் உருவில் பிறந்தவர்கள், சிந்தனையில், பேச்சில், பண்பில் மக்கள் நிலையை அடையவேண்டும். அதற்கு வழி என்ன? எழுத்தறிவைப் பெறுவதே வழி. "எழுத்தறிவைப் பெற்றால் போதுமா? எழுத்தறிவு பெறாதவர்களில் பண்பாடு உடையவர்களைக் காணவில்லையா? சான்றோரைக் காணவில்லையா? என்று கேட்போர் உண்டு. இவை குதர்க்கமான வாதங்கள். பிறிதினோய் தன்னோய் போல் நோக்கும் அளவு முதிராத, பிஞ்சு மூளைகளில் பிதற்றல்கள் ஆகும். வளமிருந்தும் வாடி வேதனைப்படுவது மக்கள் இனத்திற்குத் தேவையற்ற தொல்லையாகும்; அறிவின்மையாகும்; கோழைத் தனமாகும். படிக்க முடியாத குழந்தை பிறந்தது இல்லை: படிக்க முடியாத வயதுவந்தோர் உலகில் இல்லை. மக்கள் கூட்டம் தேவையற்று, பயனற்று, பலப் பல தொல்லைகளில், இழிவுகளில் தவித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய இழிவுகளில், மிகப்பொல்லாத இழிவு, வெறுக்கத்தக்க இழிவு நீட்டோலை வாசிக்க இயலாது நிற்றல்; அதாவது தற்குறித் தனமை. எழுத்தறியாமையில் தள்ளப்பட்ட ஆள், தன் வளர்ச்சியின்றி அல்லல்படுவதோடு, ஒரு நாளைக்கு நான்கு முறையாவது இழிவுபடுத்தப்படுகிறார். தற்குறியாள் இதைப் பார்க்கிறார்; என்னவென்று தெரியாது திகைக்கிறார். அதைப் பார்க்கிறார். வள்ளலார் படம் என்று மட்டும் புரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/733&oldid=787733" இலிருந்து மீள்விக்கப்பட்டது