பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/747

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O6 நினைவு அலைகள் இருப்பினும் நானே வீட்டின் செல்லப்பிள்ளை; மாமியாருக்கு மட்டுமல்ல, என் சகலருக்குந்தான். எனவே, என்னையும் என் மனைவியையும் நன்றாகப் பராமரித்தார்கள். அதோடு, என் கைச்செலவிற்குத் தாராளமாகவே, நான் கேட்காமலே கொடுப்பார்கள். அக்கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை இன்றும் நீள்வது, மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. கணக்குப் பார்த்துச் செலவு செய்யும் நெருக்கடி, அண்மைக்காலம் வரை என்னை நெருங்கவில்லை. மாற்றலுக்குப் பரிந்துரை கேட்கத் தெரியாத தம்பியாகிய எனக்காக, அண்ணன் குத்துரசி குருசாமியார் கேட்கத் தொடங்கினார். என்னை, தலைநகரமான சென்னைக்கு மாற்றித்தரும்படி, கல்வித்துறைக்குப் பரிந்துரை தேடினார். அக்காலத்தில் நாடி வந்தவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், தங்கள் செலவில், பிறருக்கு உண்மையாகவே உதவிய, பொதுவாழ்க்கை வள்ளல்கள், மாவட்டத்திற்குப் பத்து, இருபது பேர்களையாவது காணமுடிந்தது. அத்தகையோர் ஒரு கட்சியினர் அல்லர்; வெவ்வேறு கட்சியினர். அவர்களில் இருவர் சர். ஏ. டி. பன்னிர்செல்வமும் நெடும்பலம் என்.ஆர். சாமியப்பாவும் ஆவார்கள். இருவரும் வழிவழிச் செல்வர்கள்; அரசியலில் பெரும் பொறுப்புகளில் திறமையுடன் இருந்தவர்கள். அந்நிலை யிலும் காட்சிக்கு எளியவர்கள்; கடுஞ்சொல் அறியாதவர்கள்: நேசக்கரம் நீட்டத் தயங்காதவர்கள்; கலகலப்பாகப் பேசுபவர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வந்தவர்கள். இத்தனைக்கும் மேலாக விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். இருவருமே, குத்துளசி குருசாமிக்கு மிகவும் வேண்டியவர்கள். அதிகாரத்திலும் வயதிலும் மூத்த அவ்விருவரிடமும் குத்துசியார் உரிமையோடு தோழமையோடு பேசுவார். பன்னிர்செல்வம் விமான விபத்தில் அகால மரணமடைந்ததால் திரு. எம்.ஆர். சாமியப்பாவிற்கு, பரிந்துரைப்பணி அதிகமாயிற்று. அண்ணன் குத்துாசியார் அவரை அணுக, அவரும் தலையிட்டார். சென்னையில் உள்ள பொதுக்கல்வி இயக்கத்தோடு தொடர்பு கொண்டார். உரிய துணை இயக்குநரைக் கொண்டு, மதுரை மண்டலக்கல்வி அதிகாரிக்குப் பரிந்துரை செய்ய வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/747&oldid=787748" இலிருந்து மீள்விக்கப்பட்டது