பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/749

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7OB நினைவு அலைகள் தமிழ்வேள், உமாமகேசுவரம்பிள்ளை. அவர் எனக்கு அறிமுகமில்லாதவர். இருந்தால் என்ன? அவர் தமிழ் வளர்த்த பெரியவர் ஆயிற்றே. தமிழ் வளர்த்த பெரியவர்கள் பலர் உண்டு. இந்நூற்றாண்டிலும் உண்டு. அவர்களில் திரு. உமாமகேசுவரம் அவர்களுக்குச் சிறப்பு இடம் உண்டு. ஏன்? திருபிள்ளையவர்கள், கரந்தைத்தமிழ்ச்சங்கத்தைநிறுவமுன்னின்றவர். பிற தமிழ்ச்சங்கங்களைப் போன்றது அல்ல கரந்தைத் தமிழ்ச்சங்கம். பல தலைமுறைகளுக்குத் தொடரக் கூடிய தமிழ்ப் பணிக்கு வேராக நிற்பது, இந்தத் தமிழ்ச்சங்கம். தொன்மை வாய்ந்த தமிழ் மொழியைக் காத்து, ஆய்ந்து, வளர்க்க முற்காலத்தில், மதுரையம்பதியில், மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கின. அவற்றை மன்னர்கள் ஆதரித்து, ஊக்குவித்து வளர்த்து வந்தார்கள். தமிழ் மன்னர்கள் நிலைகுலைந்து ஆட்சி இழந்தபோது, தமிழ்மொழியும் நிலைகுலைந்தது; கொழுகொம்பற்ற கொடியாகத் தவித்தது. வெறும் வீட்டு மொழியாகத் தமிழ் குறுகியது. என்னே, காலத்தின் கோலம்! நெடுந்தொலைவிலிருந்து வந்து, நம்மை அடிமையாக்கி ஆண்ட ஆங்கிலேய ஆட்சியின் பிற்காலத்தில் உணர்வு துளிர்க்கத் தலைப்பட்டது. அவ்வெளிப்பாட்டில் ஒன்று, இராமனாதபுரம் பாண்டித்துரை தேவர் மதுரையில் நிறுவிய தமிழ்ச் சங்கம். அந்த வழியினைப் பின்பற்றித் தஞ்சையையடுத்த கரந்தையில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் சிலர் கூடி, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார்கள். அவர்களில் முன்னே நின்றவர் திரு. உமாமகேசுவரம்பிள்ளை. அச்சங்கத்தின் சார்பில், கரந்தையின் தமிழ்க் கல்லூரி தொடங்கப் படடது. அக்கல்லூரிக்கு, பெரும்புலவர் வேங்கடசாமி நாட்டார் தலைமை யேற்றுப் புகழ் மரபினை அமைத்துத் தந்தார். ஒரு காலகட்டம் வரை, கரந்தைக் கல்லூரி, தமிழ் உணர்வாளர்களை, தமிழ் அறிஞர்களை ஈர்க்கும் காந்த மையமாகச் சிறப்படன் விளங்கியக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/749&oldid=787750" இலிருந்து மீள்விக்கப்பட்டது