பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/753

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 நினைவு அலைகள் அப்போது உருவான நெருக்கடி, ஒரு வகையில் எனக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது என்றே கூறவேண்டும். இட்லரின் போர்முரசு அதைக் கூறுவதற்கு முன்னர், அப்போர்பற்றிச்சில சொல்லுகிறேன். பிரிட்டன், பிரான்சு போன்ற சில அய்ரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர்கள், கடல் கடந்து சென்று இந்தியா, இலங்கை, இந்தோசீனா போன்ற பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்டுவந்தார்கள். அயல் நாடுகளை ஆளுவதில் பிரிட்டானியர் தட்டிக்கொண்டது பெரும்பங்கு. டச்சுக்காரர்களும், பிரஞ்சுக்காரர்களும் பிடித்துக்கொண்ட அளவு, ஜெர்மனியின் கைகளில் சிக்கவில்லை. இதுபற்றி ஜெர்மானியருக்குக் காண்டு'; அழுக்காறு. அய்ரோப்பியப் பேரரசுகளை உந்திய நாடு பிடிக்கும் போட்டியே முதல் உலகப் போரை வெடிக்க வைத்தது. அப்போர் நான்கு ஆண்டுகள்வரை நீடித்து, கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலிகொண்டது. கணக்கிட முடியாத பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அப்போரால், மக்கள் இனத்தின் சிக்கல் ஏதும் தீர்க்கப்படவில்லை. அதன் குறிப்பிடத்தக்க விளைவுகள் இரண்டே. ஒன்று ஜார் ஆண்ட இரஷ்யாவில், 1917ஆம் ஆண்டில், அக்டோபர் புரட்சி வெடித்து, வெற்றிபெற்று, புதிய சோவியத் சமதர்ம பாட்டாளி ஆட்சிமுறை உருவானது. மற்றொன்று ஜெர்மனியில் மன்னர் ஆட்சி வீழ்ந்து; பின்னர் மக்களின் பேரால் வளர்ந்த ஆதிக்க ஆட்சி. இட்லர் மக்களிடம் இனவெறியை ஊட்டி வளர்த்தார். 'ஜெர்மானியர் ஆளப் பிறந்தவர்கள்; உலகம் முழுவதையும் கட்டியாளப் பிறந்தவர்கள். மற்றவர்கள் கைகட்டி உழைத்து வாழப் பிறந்தவர்கள். 'அவ்வரலாற்றுக் கடமையை ஆற்ற, ஜெர்மானியர் ஆயத்தமாக வேண்டும்; தேவையான படைப் பயிற்சியைப் பெறவேண்டும்; கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். 'தலைவனைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றப் பழகிக்கொள்ள வேண்டும் தேவையான படைப் பயிற்சியைப் பெறவேண்டும்; என்பதாக, பல்லாண்டு பறைசாற்றினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/753&oldid=787755" இலிருந்து மீள்விக்கப்பட்டது