பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/756

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 715 நான், அறுவர் கொண்ட சிற்றணிக்குத் தலைவன். குருசாமியார் மூன்று சிற்றணிகளுக்கு மேலாளர். பொதுமக்களைக் கலவரப்படுத்தாமல், ஆங்காங்கே அருகில் இருந்த, பதுங்குமிடங்களில் ஒதுங்க வைப்பது அணியின் முதற் தி டன் LD. o எங்காவது தீவிபத்தோ, காயம் படுதலோ, நிகழ்ந்துவிட்டால், உரியவர்களுக்குத் தகவல் கொடுப்பதோடு, முதல் உதவி செய்யும் அணியினருக்கு அவற்றை உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். எனவே, அந்த அணிப்பயிற்சியில் முதல் உதவிப் பயிற்சியும் சேர்ந்திருந்தது. எல்லாப் பயிற்சிகளையும் வெற்றிகரமாகப் பெற்றேன்; நல்ல மாணவனாகவே தேர்ச்சி பெற்றேன். முதல் உதவிப் பயிற்சி கொடுத்தவர் ஒரு பள்ளி ஆசிரியர்; என் அளவு படித்தவர் அல்லர். எனினும் அத்துறையில் அனுபவம் உள்ளவர்; பழுத்த பழம். அவரிடம் பாடம் கேட்க நேரிட்டதைப் பற்றி எனக்கு வெட்கமோ, வேதனையோ பிறக்கவில்லை. அது பற்றி மனக்குறை சுரக்கவில்லை. உலக வழக்கப்படி, ஆய்வாளருக்கு மட்டம் இளநிலை ஆசிரியர். அவரிடமும் கூச்சமின்றிப் பயிற்சி பெற்றது, என்னிடம் நல்ல உணர்வு வளர்ந்தது. என்னை அறியாமலே, அப்போக்கு வளர்ந்தது. அப்போக்கு என்ன? எல்லா நிலையினருக்கும் செவிசாய்த்தல்; எல்லோரிடமும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள முயலுதல். இப்போக்கே, எனக்குப் பிற்காலத்தில் பெருந்துணையாக கிற்கும் என்பது அப்போது எனக்குத் தெரியாது. 'எல்லாம் அறிந்தவர் இல்லை; யாதும் அறியாதவரும் இல்லை; எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது என்ற தெளிவைப் பெற்று, பல நிலையினருடன் தோழமையோடு பழகக் கற்றுக் கொண்டேன். விமானத் தாக்குதல் இல்லாதபோதுகூட, சிலவேளை, அது பற்றிய ஒத்திகை பார்க்க வைத்தார்கள். அவ்வேளைகளில் எனக்கு ஒதுக்கப்பட்ட நாலைந்து தெருக்களில், பதுங்கும் ஒத்திகை முதல்தரமாக இருப்பதாக மேற்பார்வையாளர்கள் மதிப்பிட்டனர். படிக்காத சாமான்யர்களும் எனக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தது எதனால 2 'கீழோராயினும் தாழ உரை என்பதை நான் பின்பற்றியதால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/756&oldid=787758" இலிருந்து மீள்விக்கப்பட்டது