பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/764

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 723 இப்போது குறிப்பிட விரும்புவது, அந்தக் கருத்தரங்கிற்குச் சென்றபோது, என் மனைவி காந்தம்மாவை உடன் அழைத்துச் சென்றேன். துதுவர் அகாஇலாலியும் அவர் மனைவியும் எங்கள் அழைப்பைப் பொருட்படுத்தி, நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து, காலைச் சிற்றுண்டி அருந்திச் சென்றார்கள். _- s முன்கூட்டியே சொல்லி வைத்து, மசால் தோசையை உண்டு மகிழ்ந்தனர். அப்போது அவரிடமிருந்து தெரிந்துகொண்ட ஒரு தகவல், புல்லரிக்கச் செய்தது. அது என்ன? பாகிஸ்தான் பிரிந்து போய் கராச்சியில் புது ஆட்சி அமைத்தபோது, போதிய இடவசதி இருந்ததா? இல்லையாம். உட்கார நாற்காலிகள் இருந்தனவா? அவற்றிற்கும் கடுமையான பற்றாக் குறையாம்; பெரிய அதிகாரிகள் கூடப் பெட்டிகளின்மேல் உட்கார்ந்து, மற்றோர் பெட்டியின்மேல் வைத்து எழுதினார்களாம். அப்படியல்லவா நாட்டுப்பற்றுச் செயல்பட வேண்டும்? இருபதாண்டுப் பாய்ச்சலில் இருந்து திரும்புவோம். அதிகாரிகளுக்கு எரிச்சல் நான் பெரிய பதவிகளுக்கு மனுப்போட்டதே பலருடைய எரிச்சலைக் கிளப்பிற்று. சிலர் மட்டந்தட்டத் துடித்தார்கள். வாய்ப்புப் பொத் தென்று விழ்ந்தது. எப்படி? இரண்டாம் உலகப்போர் முற்றியபோது, சப்பானியர் மளமளவென்று கிழக்கித்திய நாடுகள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டனர். - பர்மா அவர்கள் கைவசமாயிற்று. அங்கு இருந்த இந்தியர்கள் அகதிகளாகத் தப்பி வந்தனர். பர்மாவைப் பிடித்துக்கொண்ட சப்பானியரால் இந்தியா தாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்நிலையில், சென்னை மாநகரில் இருந்த பல அரசு அலுவலகங்கள் சென்னைக்கு வெகுதொலைவில் உள்ள ஊர்களுக்கு மாறறப படடன. சென்னையிலுள்ள கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அந்நிலையில் சென்னையில் பள்ளி ஆய்வாளர்கள் இருக்கத் தேவையில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/764&oldid=787767" இலிருந்து மீள்விக்கப்பட்டது