பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/774

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு / ՅԱ அன்று வந்த அஞ்சலில் ஆணை ஒன்று இருந்தது. நெஞ்சம் படபடத்தது; படித்துப் பார்த்தேன். 'உடல்நலச்சான்று இதழ் பெற்று அனுப்பும்படி சென்னை மாகாண அரசுப் பணியாளர்கள் பொறுக்கு ஆணையகம் கட்டளை இட்டு இருந்தது. அத்தகவலை என் மேற்பார்வையாளர் திரு. கிருஷ்ணமூர்த்த அய்யரிடம் கூறி, ஆணையைக் காட்டினேன். அவர் மகிழ்ந்தார். அடுத்து அறையில் இருந்த வடசென்னைப் பள்ளி ஆய்வாளர் திரு. ரெட்டியிடமும், மற்றோர் பக்க அறையில் இருந்த பெண்கள் தொடக்கப் பள்ளி ஆய்வாளர் செல்வி பாரிஜாதம் நாயுடுவிடமும் மகிழ்ச்சியோடு கூறினார். திரு. ரெட்டியும் செல்வி நாயுடுவும் பார்ப்பனரல்லாதார் என்பது வெளிப்படை. தத்தம் வேலையில் நிலைபெற்றுவிட்டதால், நேர்முகத் தகுதியை இழந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் என் பேரில் அழுக்காறு கொள்வார்களோ, என்று முதலில் அஞ்சினேன். செல்வி நாயுடு தாமே தேர்ந்து எடுக்கப்பட்டதைப் போனறு மகிழ்ந்தார். 'சாக்லெட்' வாங்கிவரச் செய்து எல்லோருக்கும வழங்கினார். திரு. ரெட்டியும் மகிழ்ந்தார்; ஆனால் காப்பிக்கான பாலில் இரண்டு சொட்டு பிரை மோர் சிந்துவதுபோல் சொல் இழுக்குப் பட்டார். 'வேலு! இதற்குள் மகிழ்ச்சி கொள்ளாதே! வாய்க்கு எட்டியது கைக்கு எட்டாமற் போவதும் உண்டு' என்று திரு. ரெட்டி சொன்னார். செல்வி நாயுடு மூத்தவர் என்ற முறையில் ரெட்டியாரைக் கடிந்து கொண்டார். அந்த அம்மையார், பிற்காலத்தில், பல பதவி உயர்வுகளைப் பெற்று இந்திய அரசில் சமூக நலத்துறையில் பெரும் பதவியில் சிறப்பாகப் பணியாற்றி ஒய்வுபெற்று இருக்கிறார். அம்மையாரின் வெற்றியின் இரகசியம், அவரது 'நல்லதே நினைக்கும் சிந்தனை என்றால் மிகையல்ல. கட்டளைப்படி, பெரிய அரசு மருத்துவர் கேப்டன் வெங்கடாசலம் பிள்ளையிடம் சென்று உடல் நலச்சான்று இதழைப் பெற்றேன். மருத்துவர் கருணையின் அடிப்படையில் அதைக் கொடுக்க வில்லை. 'உன் உடல்நிலை மெய்யாகவே நன்றாக இருக்கிறது என்று சொல்லியபடியே, மிகுந்த மகிழ்ச்சியோடு மருத்துவச் சான்றிதழ் 55лѣдъ тт.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/774&oldid=787778" இலிருந்து மீள்விக்கப்பட்டது