பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/776

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 735 வாழ்த்தினைப் பெற்றேன் என் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்போதும் கடமை நினைவிற்கு வந்தது. நேரே. மயிலாப்பூர் சென்று அவருடைய வாழ்த்தினைப் பெற்றேன். - சென்னை இளந்துணை ஆய்வாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள ஏற்பாடுகளைச் செய்தேன். அடுத்தி நாளே சென்னைப் பதவியை ஒப்படைத்தேன். அதற்குமுன், சென்னை மாவட்டக் கல்வி அலுவலரைக் கண்டு அவருக்கு வணக்கம் செலுத்தினேன். திரு. சச்சிதானந்தம் பிள்ளை வாழ்த்தினார். அடுத்து, பொதுக்கல்வி இயக்ககம் சென்றேன். அன்று இயக்குநரும் மூன்று துணை இயக்குநர்களும் ஊரில் அலுவலகத்தில் இருந்தனர். முதலில் திரு. முகமதைக் கண்டு வணங்கினேன். 'பாராட்டு' என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறி விடைகொடுத்தார். பின்னர் திரு. வி.ஆர். அரங்கநாத முதலியாரைக் கண்டேன். மகிழ்ச்சியைத் தெரிவித்தார்; முன்னரே தெரியுமென்றார்; உதவி தேவைப்படும் போதெல்லாம் எழுது என்றார். மூன்றாவதாக, திரு. சி.எல் லோபோவைக் கண்டு வணங்கினேன். 'தணிக்கை, உன் முதற் பணி; அப்படி என்றால் விரைந்து குறைகாணக் கற்றுக் கொள். 'எவ்வளவு நல்ல பள்ளிக்குச் சென்றாலும் எவ்வளவு கெட்டிக்காயத் தலைமை ஆசிரியரைத் தணிக்கை செய்ய நேர்ந்தாலும், இரண்டு மூன்று மணித்துளிகளில் ஏதாவது, குறை சொல்லவேண்டும். அப்படி யொன்றும் பளிச்சிடாவிட்டால் அதற்காகத் தயங்காதே! 'தலைமையாசிரியர் மேசையின் கீழே கையை வை, அநேகமாக, தூசி கையில் படும். படாவிட்டாலும் பரவாயில்லை. தூசியாக இருப்பதாகச் சொல். 'உம் மேசையையே துப்புரவாக வைத்துக் கொள்ளாத நீர் பள்ளியை எப்படி நன்றாக வைத்திருக்கப் போகிறீர் என்று பொரிந்து தள்ளும். 'அப்படிச் சில மணித்துளிகள் ஆர்ப்பரித்தால் போதும்; அப்புறம் எல்லோரும் அடங்கி ஒடுங்கிக் கிடப்பார்கள். எனவே, குறை காணக் கற்றுக் கொள்' என்று சொல்லி அனுப்பினார். மெவரல் ஸ்டேதத்தின் பாராட்டும் அறிவுரையும் கடைசியாகப் பொதுக்கல்வி இயக்குநர் சர் மெவரல் ஸ்டேதத்தைக் கண்டு, அவரது வாழ்த்தைக் கோரினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/776&oldid=787780" இலிருந்து மீள்விக்கப்பட்டது