பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தினைவு அலை கள் *-_ மூன்றாம் வகுப்பில் முப்பத்தைந்து மாணவர்கள் இருந்தோம், மாணவியர் இல்லை. பெண்களுக்குத் தனிப் பள்ளி இருந்தது. எங்களில், ஐவர் மட்டும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள்; மற்றவர்கள் காஞ்சிபுரத்துக்காரர்கள். நகரின் நிலைமை ஊட்டிய திகைப்பு. பள்ளி கூடத்தின் ஒழுங்கு, வகுப்பு அறை கண்டிப்பு முதலியவை எங்கள் ஐவருக்கும் புதிது. தம் தம் ஊரில் நாங்கள் ஐவரும் பெரிய இடத்துப் பிள்ளைகள். காஞ்சியில், இந்தப் பள்ளியில் அப்படியில்லை. பலரில் சிலர், அவ்வளவே! அழமாட்டாத குறையாகப் பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியோ வகுப்பில் இருந்து வந்தோம். 'வடிவேலுவை ஆளாக்கும் முயற்சியில், தேவைப்பட்டால், கண்கள் இரண்டையும் விட்டுவிட்டு, உடம்பை யெல்லாம் தோலுரித்தாலும் பரவாயில்லை என்று என்னைப் பள்ளியில் சேர்க்கும்போது, என் தந்தை கூறியது நினைவில் நின்று, என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. படிப்பில் மனம் ஒன்றாமையாலும், அச்சத்தாலும் எனக்குப் பாடம் ஏறவில்லை. என்னுடன் வந்திருந்த மற்ற நால்வரும் என்னுடைய நிலையில்தான் இருந்தார்கள். மூன்று வாரங்கள்வரை ஆசிரியர் பொறுத்துப் பார்த்தார். மூன்றாம் வாரம், வெள்ளிக்கிழமை, கடைசிப் பாடப் பிரிவின்போது, ஆசிரியர் எங்கள் ஐவரையும் தனித்தனியே பெயர் சொல்லி அழைத்தார். நல்ல பிரம் படி கிடைக்கும் என்று எண்ணி, நடுக்கத்தோடு நின்றோம். அடி கிடைக்கவில்லை, பின் என்ன கிடைத்தது அழைப்புக் கிடைத்தது? எதற்கு பொறுத்துக் கேளுங்கள்! வைத்தியநாதசாமி அய்யரின் கருணை 'நீங்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து முழுகுவது உண்டா?" என்று கேட்டார் ஆசிரியர். 'ஆம் சார்' என்றோம். i. 'சரி. சீக்கிரம் மூழ்கிவிட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் ஏகாம்ப ரேசுவார் கீழண்டை மாடவீதியில் உள்ள என் வீட் டுக்கு வந்து சேருங்கள். வரும்போது, புத்தகம், பலகை, பலப்பம் இவற்றைக் கொண்டு வாருங்கள். பழைய பாடங்களைத் தனியாக மீண்டும் கற்றுக் கொடுக்கிறேன்' என்று அவராகவே ஆணையிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/80&oldid=787786" இலிருந்து மீள்விக்கப்பட்டது