பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நினைவு அலைகள் =_ அந்த நாள்களை நினைக்கும்போது என்னுள் இன்ப நினைப்புகளே ஊறுகின்றன. ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளியிறுதிவரை எனக்கு ஆசிரியர்களாக விளங்கிய அனைவருக்கும் என்னைப் பிடிக்கும். எனக்கும் எல்லாரையும் பிடிக்கும். எவரும் என் பேரில் எரிச்சல் கொள்ளவில்லை. அது அவர்களுடைய பண்பாட்டின் அடையாளம். அந்தச் சில ஆசிரியர்களுக்குச் செல்வமாகிய அப்பண்பாடு, எல்லாருக்கும் சொத்தாகும். எப்போது தக்கார் கை பட்டால்: திறமையுள்ள தட்டார் கைபட்ட பொன் அழகிய அணிகலன்களாவது போன்று. திரு. சமாதானம் என்பவர் என்னுடைய ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். சிலருக்கே பெயர்ப் பொருத்தம் உண்டு. அது அவருக்கு மிக மிகப் பொருத்தமான பெயர். அவர் யாரிடமும் கோபப்பட்டதை நான் கண்டதில்லை. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் அவரைக் காணும் பேறு கிட்டிற்று. அன்றும், இளமையில் கண்ட அதே அமைதி நிலவும் திருமுகத்தைக் கண்டேன். எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தபோது, அவர் பயிற்சி பெறாத சாதாரண ஆசிரியர். நான் முதல் படிவத்திற்குப் போனபோது, அவர் ஈராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, ஆசிரியப் பயிற்சி பெறப் போகிறார் என்று கேள்விப்பட்டேன். என்னை வியப்பும் ஏக்கமும் கெளவிக் கொண்டன. இவ்வளவு நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுப்பவருக்கு யார் பயிற்சி கொடுக்க முடியும், என்று எண்ணி வியப்புற்றேன். இவரைப் பார்த்து மகிழும் பேறு போய்விடுகிறதே என்று மனத்திற்குள்ளாகவே ஏங்கினேன். பசுமலையில் ஆசிரியப் பயிற்சிபெற்ற பிறகு, திரு. சமாதானம் அதே உயர்நிலைப் பள்ளிக்குத் திரும்பி வந்தார். அறுபது வயதுவரை அமைதியாகப் பணியாற்றினார். ஒய்வு பெற்ற பிறகு தாம்பரத்தில் குடியேறினார். சாரண ஆசிரியர் அரங்கநாதம் திரு. அரங்கநாதன் என்பவர் எனக்கு வகுப்பு எடுத்த 'செகண்டரி' நிலை ஆசிரியர். அவர் சாரணிய ஆசிரியரும் ஆவார். அவர்தான் என்னைச் சாரண இயக்கத்தில் சேர்த்தார். அவருடைய ஊக்கத்தால் டெண்டர்புட்டு. இரண்டாம் வகுப்பு சாரனன் தேர்வுகளில் வெற்றி பெற்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/86&oldid=787792" இலிருந்து மீள்விக்கப்பட்டது